மின்னம்பலம் மின்னம்பலம்
ஞாயிறு, 23 பிப் 2020

அமெரிக்காவை மையமிடும் அனுஷ்கா

அமெரிக்காவை மையமிடும் அனுஷ்கா

அனுஷ்கா நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு நேற்று (மே 24) தொடங்கியுள்ளது.

அனுஷ்கா பாகுபலி, பாகமதி ஆகிய வெற்றிப் படங்களுக்குப்பின் நட்சத்திரக் கூட்டணி இணைந்துள்ள சைரா நரசிம்மா ரெட்டி படத்தை தவிர வேறெந்தப் படத்திலும் ஒப்பந்தமாகாமல் இருந்தார். உடல் எடையைக் குறைக்க அவர் மேற்கொண்டுவந்த முயற்சிகள் படங்களில் ஒப்பந்தமாவதை தள்ளிப்போட வைத்தது. ஊட்டச்சத்து நிபுணர் லூக் கௌண்டின்ஹோ வழங்கிய ஆலோசனையும் பயிற்சியும் காரணமாக தன் உடல் எடையைக் குறைத்து ஸ்லிம் லுக்கிற்கு மாறியுள்ளார். இவர்கள் இருவரும் இணைந்து எழுதிய ‘தி மேஜிக் வெயிட் லாஸ் பில்’ என்ற புத்தகம் சமீபத்தில் வெளியிடப்பட்டது.

அனுஷ்கா சைலன்ஸ் என்ற புதிய படத்தில் மாதவனுடன் இணைந்து நடிப்பதாக ஏற்கெனவே அறிவிப்பு வெளியாகியிருந்தது. மாதவனுடன் ரெண்டு படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான அனுஷ்கா நீண்ட இடைவெளிக்குப் பின் அவருடன் இணைந்து நடிக்கிறார். ஷாலினி பாண்டே முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். ஹாலிவுட் நடிகர் மைக்கேல் மேட்சனும் படக்குழுவில் இணைந்துள்ளார்.

ஹேமந்த் மதுகர் இயக்கும் இந்தப் படத்தை பியூப்பிள் பிலிம் ஃபேக்டரி தயாரிக்கிறது. அமெரிக்காவில் கதை நடைபெறுவதாக அமைக்கப்பட்டுள்ளதால் படப்பிடிப்பு நேற்று (மே 24) அங்கு தொடங்கியது.

தமிழ், தெலுங்கு, இந்தி என பல மொழிகளில் வெளியாகவுள்ள இந்தப் படத்தின் தெலுங்கு பதிப்பிற்கு நிசப்தம் எனப் பெயரிடப்பட்டுள்ளது. படத்தை அடுத்த ஆண்டு வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.

.

.

மேலும் படிக்க

.

.

டிஜிட்டல் திண்ணை: அரசியலில் ரஜினி, கமலை இணைக்க இளையராஜா முயற்சி!

.

ஓ.பன்னீரின் 'பொதுச் செயலாளர்’ திட்டம்: அதிர்ச்சியில் எடப்பாடி

.

தேர்தல் முடிவு: தினகரனுக்கு மருத்துவர்கள் பரிசோதனை!

.

ராஜ்யசபா: அன்புமணியின் அடுத்த மூவ்!

.

.

திமுக எம்.பி.க்களின் ரகசிய புலம்பல்!

.

.

சனி, 25 மே 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon