மின்னம்பலம் மின்னம்பலம்
திங்கள், 3 ஆக 2020

பிளாட்டினம் நகைகளுக்குக் கூடும் மவுசு!

பிளாட்டினம் நகைகளுக்குக் கூடும் மவுசு!

இந்தியாவில் பிளாட்டினம் நகைகள் விற்பனை 26 சதவிகிதம் வளர்ச்சி கண்டுள்ளது.

பிளாட்டினம் தொழில் துறைக் கூட்டமைப்பான பிளாட்டினம் கில்டு இண்டர்நேஷனல் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, 2018-19 நிதியாண்டில் இந்தியாவில் பிளாட்டினம் நகைகள் விற்பனை 26 சதவிகிதம் உயர்ந்துள்ளது. சென்ற ஆண்டில் பிளாட்டினம் நகைகள் விற்பனை 21 சதவிகிதம் உயர்ந்திருந்தது. பிளாட்டினம் நகைகளுக்கான சந்தை மதிப்பு தற்போது ரூ.3,000 கோடியாக இருக்கிறது. பிளாட்டினம் நகைகளுக்கான ஒட்டுமொத்த விற்பனையில் ஆண்களுக்கான நகைகள் 40 சதவிகிதப் பங்களிப்பைக் கொண்டுள்ளன.

பிளாட்டினம் நகை விற்பனை குறித்து சென்கோ கோல்டு & டைமண்ட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநரான சுவங்கர் சென் டைம்ஸ் ஆஃப் இந்தியா ஊடகத்திடம் பேசுகையில், “பிளாட்டினம் நகை விற்பனையில் ஆண்களுக்கான பிரிவு 95 சதவிகிதம் வரையில் உயர்ந்துள்ளது. அது வரும் ஆண்டுகளில் 100 சதவிகிதம் வரையில் வளர்ச்சி காணும் என்று எதிர்பார்க்கிறோம். பிளாட்டினம் நகைகளை வாங்க வருவோரில் பாதிக்கு மேலானோர் ஆண்கள்தான். வட இந்திய மாநிலங்களில் ஆண்களுக்கான பிரேஸ்லெட் விற்பனை அதிகமாக உள்ளது. ஆண்கள் தங்களது தங்க நகைகளுக்குப் பதிலாக இப்போது பிளாட்டினம் நகைகளுக்கு அதிகமாக மாறத் தொடங்கியுள்ளனர்” என்று கூறியுள்ளார்.

.

.

மேலும் படிக்க

.

.

டிஜிட்டல் திண்ணை: அரசியலில் ரஜினி, கமலை இணைக்க இளையராஜா முயற்சி!

.

ஓ.பன்னீரின் 'பொதுச் செயலாளர்’ திட்டம்: அதிர்ச்சியில் எடப்பாடி

.

தேர்தல் முடிவு: தினகரனுக்கு மருத்துவர்கள் பரிசோதனை!

.

ராஜ்யசபா: அன்புமணியின் அடுத்த மூவ்!

.

.

திமுக எம்.பி.க்களின் ரகசிய புலம்பல்!

.

.

சனி, 25 மே 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon