மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, வெள்ளி, 4 டிச 2020

சந்திரசேகர ராவைச் சந்திக்கும் ஜகன்மோகன்

சந்திரசேகர ராவைச் சந்திக்கும் ஜகன்மோகன்

வரும் 30ஆம் தேதியன்று ஆந்திர முதல்வராகப் பதவியேற்கவுள்ள ஜகன்மோகன் ரெட்டி, இன்று தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவைச் சந்திக்கவுள்ளார்.

நடந்து முடிந்த ஆந்திர சட்டமன்றத் தேர்தலில் 151 இடங்கள் பெற்று ஆட்சியைப் பிடித்துள்ளது ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி. ஆட்சியில் இருந்த சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேசம் கட்சி 23 இடங்களை மட்டுமே பிடித்துள்ளது. மக்களவைத் தேர்தலில் ஆந்திராவிலுள்ள 25 தொகுதிகளில் 22 ஐ பிடித்துள்ளது ஒய்எஸ்ஆர் காங்கிரஸ். சந்திரபாபு நாயுடுவுக்கு 3 இடங்கள் மட்டுமே கிடைத்துள்ளன.

வரும் 30ஆம் தேதியன்று ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜகன்மோகன் ரெட்டி ஆந்திர முதல்வராகப் பதவியேற்கவுள்ளார். அமராவதியில் நடைபெறும் இந்த விழாவுக்கு அழைப்பு விடுப்பதற்காக, இன்று (மே 25) அவர் ஹைதரபாத் சென்று தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவைச் சந்திக்கிறார். தேர்தலுக்குப் பிறகான சந்திப்பு என்பதால் இது முக்கியத்துவம் பெறுகிறது.

தெலங்கானா ராஷ்டிரிய சமிதி (டிஆர்எஸ்), ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் இரு கட்சிகளும் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சியைக் கடுமையாக எதிர்த்து வருகின்றன. கடந்த டிசம்பர் மாதம் தெலங்கானாவில் நடந்த சட்டமன்றத் தேர்தலில் டிஆர்எஸ் கட்சிக்கு ஆதரவு தெரிவித்திருந்தது ஒய்எஸ்ஆர் காங்கிரஸ். அதோடு கூட்டாட்சி முன்னணியில் சேருமாறு ஒய்எஸ்ஆர் காங்கிரஸுக்கு அழைப்பு விடுத்திருந்தது டிஆர்எஸ்.

ஒய்எஸ்ஆர் காங்கிரஸில் இருக்கும் மூத்த தலைவர்கள் பலருக்கு ஆந்திர அமைச்சரவையில் இடம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

.

.

மேலும் படிக்க

.

.

டிஜிட்டல் திண்ணை: அரசியலில் ரஜினி, கமலை இணைக்க இளையராஜா முயற்சி!

.

ஓ.பன்னீரின் 'பொதுச் செயலாளர்’ திட்டம்: அதிர்ச்சியில் எடப்பாடி

.

தேர்தல் முடிவு: தினகரனுக்கு மருத்துவர்கள் பரிசோதனை!

.

ராஜ்யசபா: அன்புமணியின் அடுத்த மூவ்!

.

.

திமுக எம்.பி.க்களின் ரகசிய புலம்பல்!

.

.

சனி, 25 மே 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon