மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, சனி, 24 அக் 2020

குடியரசுத் தலைவரை சந்தித்தார் மோடி

குடியரசுத் தலைவரை சந்தித்தார் மோடி

16ஆவது மக்களவையைக் கலைக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில், பிரதமர் மோடி குடியரசுத் தலைவரை சந்தித்துள்ளார்.

பாரதிய ஜனதா கட்சி 2ஆவது முறையாக தனிப்பெரும்பான்மை பெற்றுள்ள நிலையில், மீண்டும் ஆட்சியமைப்பதற்கான பணிகளை மேற்கொண்டு வருகிறது. டெல்லியில் நேற்று (மே 24) மாலை பிரதமர் மோடி தலைமையில் அமைச்சரவைக் குழுக் கூட்டம் நடந்தது. இந்தக் கூட்டத்தில் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ள நிதியமைச்சர் அருண் ஜேட்லியைத் தவிர்த்து அமைச்சர்கள் நிதின் கட்கரி, நிர்மலா சீதாராமன், சுஷ்மா ஸ்வராஜ், சுரேஷ் பிரபு உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர். ஜூன் 3ஆம் தேதியோடு 16ஆவது மக்களவை காலாவதியாகவுள்ள நிலையில் நேற்றைய அமைச்சர்கள் கூட்டத்தில் 16ஆவது மக்களவையைக் கலைக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை நேற்று இரவு நேரில் சந்தித்த பிரதமர் நரேந்திர மோடி 16ஆவது மக்களவையைக் கலைக்க அமைச்சரவைக் குழு நிறைவேற்றிய தீர்மானத்தை வழங்கியுள்ளார். இதனை ஏற்றுக்கொண்ட ராம்நாத் கோவிந்த், புதிய அரசு அமையும் வரை தங்களது பணிகளை தொடருமாறு மோடியிடம் கேட்டுக்கொண்டுள்ளார். வாக்கு எண்ணிக்கை மே 23ஆம் தேதி நடந்த நிலையில், பாரதிய ஜனதா கட்சி 303 தொகுதிகளிலும், காங்கிரஸ் கட்சி 52 தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளதாக இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையம் நேற்று இரவு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

வேலூர் தவிர்த்து 542 தொகுதிகளுக்கு நடந்த தேர்தலில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களின் பட்டியலை 3 தேர்தல் ஆணையர்களும் இணைந்து குடியரசுத் தலைவரை சில தினங்களில் நேரில் சந்தித்து வழங்கவுள்ளனர். இதன்பிறகு மே 30ஆம் தேதி மீண்டும் நரேந்திர மோடி பிரதமராகப் பொறுப்பேற்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.

.

.

மேலும் படிக்க

.

.

ராஜ்யசபா: அன்புமணியின் அடுத்த மூவ்!

.

.

பன்னீர்செல்வம் மீண்டும் முதல்வராவார்: தங்க தமிழ்ச்செல்வன்

.

திமுக எம்.பி.க்களின் ரகசிய புலம்பல்!

.

அமேதியில் ராகுல் வீழ்ந்த பின்னணி!

.

பலித்தது மின்னம்பலம் - மக்கள் மனம் - ஒரு சோறு பதம்!

.

.

சனி, 25 மே 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon