மின்னம்பலம் மின்னம்பலம்
ஞாயிறு, 23 பிப் 2020

வணிக வளாகத்தில் தீ விபத்து: 19 மாணவர்கள் பலி!

வணிக வளாகத்தில் தீ விபத்து: 19 மாணவர்கள் பலி!

சூரத்தில் வணிக வளாகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 19 மாணவர்கள் உயிரிழந்துள்ளனர்.

குஜராத் சூரத் நகரில் தக்சஷீலா என்ற வணிக வளாகம் உள்ளது. இந்த வளாகத்தில் மாணவர்களுக்கான ட்யூசன் சென்டர் ஒன்றும் இருந்துள்ளது நேற்று மதியம் 3.30 மணியளவில் இந்த வளாகத்தில் திடீரென்று தீ விபத்து ஏற்பட்டிருக்கிறது. இதில் சிக்கி பயிற்சி வகுப்பிலிருந்த மாணவர்கள் பலர் உயிரிழந்துள்ளனர்.

வளாகத்தின் மூன்றாவது மற்றும் நான்காவது தளத்தில் தீ விபத்து ஏற்பட்டு, அப்பகுதி முழுவதும் பரவியிருக்கிறது. இவ்விபத்திலிருந்து தங்கள் உயிரைக் காப்பாற்றிக் கொள்ளக் கட்டடத்திலிருந்து மாணவர்கள் குதிப்பது போன்ற வீடியோவும் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தீ விபத்து ஏற்பட்ட, கட்டடத்துக்குக் கீழே இருக்கும் மக்கள், மாணவர்களைக் குதிக்கச் சொல்லும் காட்சியும் வீடியோவில் பதிவாகியுள்ளது.

தீ விபத்தில் சிக்கியும், மாடியிலிருந்து குதித்ததில் அடிபட்டும் சுமார் 19 மாணவர்கள் உயிரிழந்துள்ளனர். காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் சிலர் கவலைக்கிடமாக உள்ளனர். தீ விபத்து ஏற்பட்ட ட்யூசன் சென்டரில் இருந்தவர்கள் 14 முதல் 17 வயதுடையவர்கள் என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முதற்கட்ட விசாரணையில் மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று போலீசார் சந்தேகித்துள்ளனர். எனினும் விபத்துக்கான காரணம் குறித்து சூரத் போலீசார் விசாரணையில் இறங்கியுள்ளனர். 19 தீயணைப்பு வாகனங்கள் மூலம், தீயணைக்கும் பணி நடைபெற்றுள்ளது.

இவ்விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ள பிரதமர் மோடி, பாதிக்கப்பட்ட பகுதிகளில் தேவையான அனைத்து நடவடிக்கைகளை எடுக்க குஜராத் மாநில அரசுக்கு உத்தரவிட்டுள்ளார்.

உயிரிழந்தவர்களின் ஆத்மா சாந்தி அடையப் பிரார்த்திப்பதாகத் தெரிவித்துள்ள குஜராத் மாநில முதல்வர் விஜய் ரூபானி உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு 4 லட்சம் ரூபாய் இழப்பீடு அறிவித்துள்ளார். விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், பாஜக தலைவர் அமித் ஷா, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்டோரும் இரங்கல் தெரிவித்துள்ளனர். சூரத் பாஜக தொண்டர்கள் அனைத்து உதவிகளையும் செய்து தர வேண்டும் என்று அமித் ஷா வலியுறுத்தியுள்ளார்.

.

.

மேலும் படிக்க

.

.

ராஜ்யசபா: அன்புமணியின் அடுத்த மூவ்!

.

.

பன்னீர்செல்வம் மீண்டும் முதல்வராவார்: தங்க தமிழ்ச்செல்வன்

.

திமுக எம்.பி.க்களின் ரகசிய புலம்பல்!

.

அமேதியில் ராகுல் வீழ்ந்த பின்னணி!

.

பலித்தது மின்னம்பலம் - மக்கள் மனம் - ஒரு சோறு பதம்!

.

.

சனி, 25 மே 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon