மின்னம்பலம் மின்னம்பலம்
ஞாயிறு, 23 பிப் 2020

தண்ணீர் லாரி உரிமையாளர்கள் போராட்டம் ஒத்திவைப்பு!

தண்ணீர் லாரி உரிமையாளர்கள் போராட்டம் ஒத்திவைப்பு!

சென்னை புறநகர்ப் பகுதிகளில் இருந்து நீர் எடுக்கப்படும் விவகாரம் தொடர்பாக ஏற்பட்ட பிரச்சினைகளால் காலவரையற்ற போராட்டத்தை நடத்தப்போவதாக அறிவித்திருந்தது தமிழ்நாடு தனியார் தண்ணீர் லாரி உரிமையாளர்கள் சங்கம். தற்போது இந்த போராட்டம் தள்ளி வைக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை மற்றும் அதன் புறநகர்ப்பகுதிகளில் ஏற்பட்டுள்ள நீர் பற்றாக்குறையைப் போக்க, தண்ணீர் லாரிகளில் இருந்து நீர் பெறப்படுகிறது. இதற்காக, சுமார் 4,500 லாரிகள் பயன்பாட்டில் உள்ளன. ஒருநாளைக்கு 12,000 முறை இந்த லாரிகள் நீர் எடுத்து வருகின்றன.

இதற்காக, அருகிலுள்ள மாவட்டங்களில் இருக்கும் ஆழ்துளைக் கிணறுகளையே நாடுகின்றனர் தண்ணீர் லாரி உரிமையாளர்கள். ஆனால், ஆழ்துளைக் கிணறுகளில் இருந்து அதிகளவில் நீர் எடுப்பதற்கு எதிர்ப்பு வலுத்து வருகிறது. அந்த வட்டாரத்திலுள்ள மக்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதனால், வரும் மே 27ஆம் தேதி முதல் தாங்கள் காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபடப் போவதாகத் தெரிவித்திருந்தது தமிழ்நாடு தனியார் தண்ணீர் லாரி உரிமையாளர்கள் சங்கம்.

நேற்று (மே 24) இந்த விவகாரம் தொடர்பாக சென்னை மாநகராட்சி நிர்வாகம் மற்றும் நீர் வழங்கல் துறை அதிகாரிகளுடன் தமிழ்நாடு தனியார் தண்ணீர் லாரி உரிமையாளர்கள் சங்கம் பேச்சுவார்த்தை நடத்தியது. அப்போது, சென்னையின் பல்வேறு பகுதியிலுள்ள மக்கள் தண்ணீர் இல்லாமல் தவிப்பது குறித்து விவாதிக்கப்பட்டது. இதன் முடிவில், தண்ணீர் லாரி உரிமையாளர்கள் மேற்கொள்ளவிருந்த போராட்டத்தைத் தள்ளிவைக்க முடிவு செய்யப்பட்டது.

இது தொடர்பாகப் பேசிய தண்ணீர் லாரி உரிமையாளர்கள் சங்கச் செயலாளர் முருகன், ஆழ்துளைக் கிணறு உரிமையாளர்களுக்கான உரிமங்களைப் பெற்றுத் தர நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்ததாகக் கூறினார்.

“நாங்கள் தண்ணீர் கொண்டுவரும் பணியை மேற்கொள்ள ஒப்புதல் தெரிவித்துள்ளோம். இல்லாவிட்டால், தற்போதுள்ள தண்ணீர் பற்றாக்குறை நிலைமை மிக மோசமாகிவிடும். தற்போது 40 சதவிகிதம் மட்டுமே எங்களது செயல்பாடு உள்ளது. அதிக முறை நாங்கள் தண்ணீர் எடுத்துவருவதில்லை. ஆழ்துளைக் கிணறுகளில் இருந்து நீர் எடுப்பதை மீண்டும் தடுத்தால், காலவரையற்ற போராட்டம் மேற்கொள்வதைத் தவிர எங்களுக்கு வேறு வழியில்லை” என்று அவர் தெரிவித்தார்.

.

.

மேலும் படிக்க

.

.

ராஜ்யசபா: அன்புமணியின் அடுத்த மூவ்!

.

.

பன்னீர்செல்வம் மீண்டும் முதல்வராவார்: தங்க தமிழ்ச்செல்வன்

.

திமுக எம்.பி.க்களின் ரகசிய புலம்பல்!

.

அமேதியில் ராகுல் வீழ்ந்த பின்னணி!

.

பலித்தது மின்னம்பலம் - மக்கள் மனம் - ஒரு சோறு பதம்!

.

.

சனி, 25 மே 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon