மின்னம்பலம் மின்னம்பலம்
ஞாயிறு, 23 பிப் 2020

197 சிட்டிங் எம்.பி.க்கள் மீண்டும் தேர்வு!

197 சிட்டிங் எம்.பி.க்கள் மீண்டும் தேர்வு!

2014 மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்று மக்களவை உறுப்பினர்களாக உள்ள 197 பேர் மீண்டும் 2019ஆம் ஆண்டுதேர்தலில் வெற்றி பெற்றுள்ளனர்.

மக்களவைத் தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில் தேர்தல் தொடர்பான பல்வேறு தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. 303 இடங்களில் பாஜக கூட்டணி வெற்றி பெற்றுள்ள அதே சமயத்தில் எந்த வேட்பாளர்களையும் விரும்பாமல் பலர் நோட்டாவுக்கு வாக்களித்துள்ளனர். தமிழகத்தில் சுமார் 41,150 பேர் நோட்டாவுக்கு வாக்களித்திருக்கின்றனர். நாட்டிலேயே அதிகபட்சமாக பிகாரில் 8.17 லட்சம் பேர் நோட்டவுக்கு வாக்களித்துள்ளனர்.

இந்நிலையில், சிட்டிங் எம்.பி.க்களாக உள்ள 197 பேர், இந்த தேர்தலிலும் மீண்டும் வெற்றி பெற்று எம்.பி.க்களாக உள்ளனர் என்பதும் தெரியவந்துள்ளது. இவர்களில் 27பேர் பெண்கள். நிதின் கட்கரி, கிரண் ரிஜுஜு உட்பட பாஜக சார்பில் மட்டும் 145 பேர் வெற்றி பெற்றுள்ளனர். திருணமூல் காங்கிரஸ் மேற்கு வங்கத்திலிருந்து 23 சிட்டிங் எம்.பி.க்களை களமிறக்கியது. இதில் 12 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். ஆந்திராவில் தெலுங்கு தேசம் சார்பில் 9 உறுப்பினர்கள் போட்டியிட்ட நிலையில் 2 பேர் மட்டுமே வெற்றி பெற்றனர். தெலங்கானாவில் டிஆர்எஸ் சார்பில் 2 பேரும், பஞ்சாபில் காங்கிரஸ் சார்பில் 3 பேரும் மீண்டும் தேர்வாகியுள்ளனர்.

தமிழகத்தைப் பொறுத்தவரை அதிமுக சார்பில் 7 பேர் போட்டியிட்ட நிலையில் ஒருவர் கூட தேர்வாகவில்லை. தமிழக பாஜகவிலிருந்து கன்னியாகுமரியில் போட்டியிட்ட மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், தருமபுரி எம்.பி அன்புமணி உள்ளிட்டோரும் தோல்வியைத் தழுவினர் என்பது குறிப்பிடத்தக்கது.

.

.

மேலும் படிக்க

.

.

ராஜ்யசபா: அன்புமணியின் அடுத்த மூவ்!

.

.

பன்னீர்செல்வம் மீண்டும் முதல்வராவார்: தங்க தமிழ்ச்செல்வன்

.

திமுக எம்.பி.க்களின் ரகசிய புலம்பல்!

.

அமேதியில் ராகுல் வீழ்ந்த பின்னணி!

.

பலித்தது மின்னம்பலம் - மக்கள் மனம் - ஒரு சோறு பதம்!

.

.

சனி, 25 மே 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon