மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 24 மே 2019

ராஜ்யசபா: அன்புமணியின் அடுத்த மூவ்!

ராஜ்யசபா: அன்புமணியின் அடுத்த மூவ்!

மக்களவைத் தேர்தல் முடிவுகளில் அதிமுக சார்பில் ஒரே ஒரு வெற்றியாக தேனி தொகுதி மட்டுமே கிடைத்திருக்கிறது. பாமக சார்பில் அதிமுக அணியில் போட்டியிட்ட 7 தொகுதிகளிலும் தோல்வியடைந்திருக்கிறது அக்கட்சி.

அன்புமணி தர்மபுரி தொகுதியில் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட திமுக வேட்பாளர் செந்தில்குமாரிடம் 70 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோற்றுவிட்டார். செந்தில்குமார் 5 லட்சத்து 74 ஆயிரம் வாக்குகள் பெற்று வெற்றி பெற்ற நிலையில், அன்புமணி 5 லட்சத்து 4 ஆயிரம் வாக்குகள் பெற்றுள்ளார்.

அதிமுக கூட்டணி படுதோல்வி அடைந்துவிட்ட நிலையில் தேர்தல் கூட்டணி அமைத்தபோது கையெழுத்திடப்பட்ட ஒப்பந்தப்படி அதிமுக மாநிலங்களவை உறுப்பினர் பதவியை பாமகவுக்கு கொடுக்குமா என்பது தற்போது கேள்விக்குறியாகியிருக்கிறது.

மக்களவைத் தேர்தலுக்கான அதிமுக-பாமக கூட்டணி அமைத்தபோது 7+1 என்ற வகையில் ஒப்பந்தம் கையெழுத்தானது. அதாவது 7 மக்களவைத் தொகுதிகள், ஒரு மாநிலங்களவைத் தொகுதி. இப்போது அன்புமணியே தோல்வியடைந்துவிட்டதால் அந்த மாநிலங்களவை உறுப்பினர் பதவியை அன்புமணிக்கே கேட்டு வாங்குவது என்று பாமக முடிவெடுத்திருக்கிறது.

ஆனால் அதிமுக வட்டாரங்களிலோ, “கூட்டணி வெற்றி அடைஞ்சா மாநிலங்களவை உறுப்பினர் பதவி கொடுக்கலாம். ஒட்டுமொத்தமா தோல்வி அடைஞ்ச நிலையில் அதிமுகவுக்கே எம்.பி. பதவியை வச்சுக்கலாம்” என்ற ஒரு பேச்சு எழுந்திருக்கிறது. இது பாமக தரப்புக்கும் சென்றிருக்கிறது.

“தேர்தல் தோல்வி பற்றி சீரியசாக எடுத்துக் கொள்ளாத அன்புமணி வழக்கம்போல டென்னிஸ் விளையாடப் போய்விட்டார். அதற்குக் காரணம் இருக்கிறது. கூட்டணி ஒப்பந்தத்தின்போது அதிமுக கையெழுத்துப் போட்டுக் கொடுத்தபடி ஒரு மாநிலங்களவை உறுப்பினர் பதவியை பாமகவுக்குத் தரவேண்டும். இல்லையென்றால் அமித் ஷாவிடம் தனக்கு இருக்கும் நெருக்கத்தைப் பயன்படுத்தி அதை எப்படி வாங்குவது என்பது அன்புமணிக்குத் தெரியும்” என்கிறார்கள் பாமக வட்டாரத்தில்.

கர்நாடக நீர் வரத்து: உயரும் மேட்டூர் அணையின் நீர் மட்டம்!

3 நிமிட வாசிப்பு

கர்நாடக நீர் வரத்து: உயரும் மேட்டூர் அணையின் நீர் மட்டம்!

துப்பாக்கியுடன் செல்ஃபி: குண்டு பாய்ந்து பலியான சோகம்!

3 நிமிட வாசிப்பு

துப்பாக்கியுடன் செல்ஃபி: குண்டு பாய்ந்து பலியான சோகம்!

யானைகளின் வழித்தடம்: சர்வதேச நிபுணர்களுடன் ஆய்வு!

5 நிமிட வாசிப்பு

யானைகளின் வழித்தடம்: சர்வதேச நிபுணர்களுடன் ஆய்வு!

வெள்ளி 24 மே 2019