மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, வெள்ளி, 4 டிச 2020

பன்னீர்செல்வம் மீண்டும் முதல்வராவார்: தங்க தமிழ்ச்செல்வன்

பன்னீர்செல்வம் மீண்டும் முதல்வராவார்: தங்க தமிழ்ச்செல்வன்

மக்களவைத் தேர்தலில் தேனி தொகுதியில் அதிமுக சார்பாக பன்னீர்செல்வம் மகன் ரவீந்திரநாத் குமாரும், காங்கிரஸ் சார்பாக ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனும், அமமுக சார்பாக தங்க தமிழ்ச்செல்வனும் போட்டியிட்டனர். நேற்று காலை வாக்கு எண்ணிக்கை ஆரம்பித்தது தொடங்கியே ரவீந்திரநாத் குமார் முன்னிலையில் இருந்துவந்தார். வாக்கு எண்ணிக்கை முடிவில் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனை விட 76,693 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றிபெற்றார் ரவீந்திரநாத். அமமுக வேட்பாளர் தங்க தமிழ்ச்செல்வன் 1,44,050 வாக்குகள் பெற்று மூன்றாமிடம் பிடித்தார்.

தோல்வி தொடர்பாகத் தேனியில் இன்று (மே 24) செய்தியாளர்களிடம் பேசிய தங்க தமிழ்ச்செல்வன், “பன்னீர்செல்வம் மகனுக்காக ரூ.500 கோடி வரை செலவழித்துள்ளனர். இது யாருடைய பணம். பன்னீசெல்வம் தந்தை ஓட்டக்காரத் தேவரிடம் அவ்வளவு பணம் இருந்ததா? 500 கோடி எப்படி செலவு செய்தார்கள் என்று அவர்களிடம் கேளுங்கள். மோடி, பன்னீர்செல்வம் ஆசியுடன் பாஜகவுடன் கூட்டணி வைத்து அதிமுக மோசம் போய்விட்டது. மீண்டும் தமிழகத்தின் முதலமைச்சராக பன்னீர்செல்வம் வருவார். எடப்பாடியைப் பதவியிலிருந்து நீக்கிவிடுவார்கள். மோடியின் சொல்படிதான் அங்கு அனைத்தும் நடக்கப்போகிறது” என்று கடுமையாக விமர்சித்தார்.

.

.

மேலும் படிக்க

.

.

ராஜ்யசபா: அன்புமணியின் அடுத்த மூவ்!

.

.

திமுக எம்.பி.க்களின் ரகசிய புலம்பல்!

.

அமேதியில் ராகுல் வீழ்ந்த பின்னணி!

.

டிஜிட்டல் திண்ணை: ஆட்சியைக் கவிழ்க்க திமுக வியூகம்!

.

மோடிகளை உருவாக்கும் மோடி

.

.

தேர்தல் ஆணையத்தை விமர்சித்தவர், “தேர்தல் ஆணையம் என ஒன்று எங்கு இருக்கிறது. அது தேவையில்லாத ஒன்று. 5 ஆயிரம் கோடி செலவு செய்து தேர்தல் நடத்துவதற்கு, யாரோ தேர்தலை நடத்திவிட்டுச் சென்றுவிடலாமே” என்றார்.

அதிமுக, திமுகவுக்கு அடுத்து அமமுகவை மக்கள் மூன்றாவது பெரிய கட்சியாக அங்கீகரித்துள்ளனர். எனக்கு வாக்களித்த மக்களுக்கு நன்றி என்று குறிப்பிட்டவர், “ஆண்டிப்பட்டி, பெரியகுளம் ஆகிய சட்டமன்ற தொகுதிகளின் இடைத் தேர்தலில் அதிமுக தோல்வியடைகிறது. ஆனால், இந்தத் தொகுதிகளை உள்ளடக்கிய தேனி மக்களவைத் தொகுதியில் பன்னீர்செல்வம் மகன் வெற்றிபெறுகிறார் என்றால் இது எப்படி நடக்கும். 2 தொகுதிகளில் தோற்கடித்துவிட்டு தன்னுடைய மகனை மட்டும் வெற்றிபெற வைத்துள்ளார்” என்று குற்றம்சாட்டினார். அடுத்தகட்ட செயல்பாடுகள் குறித்து தினகரன் முடிவு செய்வார் என்றும் அவர் குறிப்பிட்டார்.

வெள்ளி, 24 மே 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon