மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, திங்கள், 25 ஜன 2021

மீண்டும் இணையும் காதல் ஜோடி!

மீண்டும் இணையும் காதல் ஜோடி!வெற்றிநடை போடும் தமிழகம்

திருமணத்துக்குப் பின் ஆர்யாவும் சாயிஷாவும் இணைந்து நடிக்கும் புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு நேற்று (மே 23) பூஜையுடன் தொடங்கியது.

ஆர்யா - சாயிஷா நடிப்பில் கடைசியாக வெளியான திரைப்படம் கஜினிகாந்த். இந்தப் படத்தை இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தை இயக்கிய சந்தோஷ் பி ஜெயகுமார் இயக்கியிருந்தார். முழு நீள காமெடி திரைப்படமாக உருவான இந்தத் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது.

கஜினிகாந்த் படத்தில் நடிக்கும்போது சாயிஷாவுக்கும் ஆர்யாவுக்கும் இடையே காதல் மலர்ந்துள்ளது. இதை ஆர்யா கடந்த காதலர் தினம் அன்று தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்திருந்தார். இதையடுத்து இருவரும் கடந்த மார்ச் 10ஆம் தேதி அன்று ஹைதராபாத்தில் திருமணம் செய்து கொண்டனர்.

இந்த நிலையில், திருமணத்துக்குப் பின் சாயிஷா நடிப்பாரா என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்தது. அதற்கு சாயிஷா, திருமணத்துக்குப் பின்னும் தொடர்ந்து நடிப்பேன் என்று ஒரு பேட்டியில் கூறினார். அதன்படி, கன்னடத்தில் ஒரு படத்திலும், சூர்யா நடிக்கும் காப்பான் படத்திலும் நடித்து வருகிறார்.

தொடர்ந்து, திருமணத்துக்குப் பின் ஆர்யாவும் சாயிஷாவும் இணைந்து நடிக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வந்த நிலையில், நேற்று (மே 23) இருவரும் இணைந்து நடிக்கும் புதிய படத்துக்கான படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது. டிக் டிக் டிக் படத்துக்குப் பின் சக்தி சவுந்தரராஜன் இயக்கும் இந்தப் படத்துக்கு டெடி எனப் பெயர் வைக்கப்பட்டுள்ளது.

பர்மா படத்துக்கு ஒளிப்பதிவு செய்த யுவா இந்தப் படத்துக்கு ஒளிப்பதிவு செய்கிறார். விஜய் ஆண்டனியின் காளி படத்துக்குச் சண்டைக் காட்சிகளை அமைத்த சக்தி சரவணன் இந்தப் படத்துக்கும் சண்டைக் காட்சிகளை அமைக்கிறார். சிவ நந்திஸ்வரன் படத்தொகுப்பைக் கவனிக்கிறார். மேலும் சக்தி சவுந்தரராஜனின் சென்ற படத்துக்கு இசையமைத்த டி.இமான் இந்தப் படத்துக்கு இசையமைக்கிறார்.

டிக் டிக் டிக் படத்துக்குப் பின் சக்தி சவுந்தரராஜன் இயக்கும் படம் என்பதாலும், திருமணத்துக்குப் பின் ஆர்யாவும் சாயிஷாவும் இணைந்து நடிக்கும் படம் என்பதாலும் இந்தப் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

வியாழன், 23 மே 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon