மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, வியாழன், 23 ஜன 2020

பிரதமர் ப.சிதம்பரம்? மம்தா வலியுறுத்தல்!

பிரதமர் ப.சிதம்பரம்? மம்தா வலியுறுத்தல்!

இந்தத் தேர்தல் களத்தில் காங்கிரஸ் மற்றும் எதிர்க்கட்சியினரை நோக்கி பாரதிய ஜனதா கேட்ட ஒரு முக்கியமான கேள்வி, ’உங்கள் பிரதமர் வேட்பாளர் யார்?’ என்பதுதான். அதற்கு இப்போது வரை காங்கிரஸ் மற்றும் எதிர்க்கட்சிகள் நேரடியாக பதில் சொல்லவில்லை. திமுக மட்டுமே பிரதமர் வேட்பாளராக ராகுல் காந்தியை முன்மொழிந்தது.

இந்தச் சூழலில் நேற்று மே 21 ஆம் தேதி டெல்லியில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் கூட்டம் நடைபெற்றது. காங்கிரஸ் சார்பில் அகமது படேல், குலாம் நபி ஆசாத், அசோக் கெலாட், அபிஷேக் மனு சிங்வி ஆகியோர் கலந்துகொண்டனர். திமுகவின் சார்பில் கனிமொழி, தெலுங்கு தேசம் கட்சியின் சார்பில் சந்திரபாபு நாயுடு, பகுஜன் சமாஜ் கட்சியின் சார்பில் சதீஷ் சந்திர மிஷ்ரா, சிபிஎம் சார்பில் சீதாராம் யெச்சூரி, சிபிஐ சார்பில் டி.ராஜா, ஆம் ஆத்மி சார்பில் அரவிந்த் கெஜ்ரிவால், திருணமூல் காங்கிரஸ் கட்சியின் சார்பில் தெரிக் ஓ பிரைன், சமாஜ்வாதி ராம்கோபால் யாதவ், ராஷ்ட்ரிய ஜனதா தளம் மனோஜ் ஜா, தேசியவாத காங்கிரஸ் கட்சியின் சார்பில் மஜீத் மேமன், தேசிய மாநாட்டுக் கட்சியின் சார்பில் தேவிந்தர் சிங் ராணா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு உள்ளிட்ட விஷயங்கள் பற்றி விவாதிக்கப்பட்ட நிலையில் இந்தக் கூட்டத்துக்குப் பின் பிரதமர் யார் என்பது பற்றிய ஆலோசனையும் நடைபெற்றிருக்கிறது.

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜிக்கு ராகுல் காந்தி பிரதமராக வருவதில் விருப்பமில்லை என்று தெரிகிறது. இதுபற்றி சந்திரபாபு நாயுடு உள்ளிட்டோரிடம் தனிப்பட்ட முறையில் நேற்று பேசிய மம்தா, “மாநிலக் கட்சிகள்தான் பிரதமர் யார் என்பதைத் தீர்மானிக்கும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. அப்படி ஒரு சூழலில் மாநிலக் கட்சிகளின் ஆதரவோடு காங்கிரஸ் ஆட்சி அமைப்பதிலும் எனக்குப் பிரச்சினையில்லை. ஆனால் பிரதமராக ராகுல் காந்தி வருவதில் எனக்கு உடன்பாடில்லை.

எங்கள் மாநிலத்தைச் சேர்ந்த பிரணாப் முகர்ஜி அவர்களை பிரதமர் ஆக்கலாம். ஆனால் அவர் குடியரசுத் தலைவர் பதவியை வகித்து விட்டதால் அவரை பிரதமராக்க முடியுமா என்று ஒரு கேள்வி வரும். அவர் இல்லை என்றாலும் காங்கிரஸின் மூத்த தலைவராக இருக்கும் சிதம்பரத்தைப் பிரதமராக்குவதில் தவறு இல்லை என்று நினைக்கிறேன். எனவே சீனியரான சிதம்பரம் போன்றவர்கள் பிரதமரானால் காங்கிரஸ் கட்சிக்கு மாநிலக் கட்சிகள் ஆதரவு அளிப்பதில் தயக்கம் இருக்காது” என்று கூறியுள்ளார்.

இந்தத் தகவல் காங்கிரஸ் வட்டாரத்திற்கும் சென்று சேர்ந்திருக்கிறது. ஏற்கனவே பிரதமர் யார் என்பது பற்றித் தேர்தலுக்குப் பின் முடிவெடுக்கப்படும் என்று காங்கிரஸ் தரப்பிலும் மம்தா, இடதுசாரிகள் தரப்பிலும் சொல்லிவந்துள்ள நிலையில் மம்தாவின் இந்த புதிய கருத்து டெல்லியில் முக்கியத்துவம் பெற்றுள்ளது. முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்குக்குப் பிரதமர் ஆகும் வாய்ப்பு வந்தால்கூட உடல் நிலை காரணமாக ஏற்கும் நிலையில் அவர் இல்லை. எனவே மம்தா பானர்ஜியின் கருத்து மாநிலக் கட்சிகளால் ஏற்கப்படும் பட்சத்தில், தேர்தல் முடிவுக்குப் பின் தேவைப்பட்டால் ப.சிதம்பரத்துக்கு பிரதமர் வாய்ப்பு வரக்கூடும் என்கிறார்கள் டெல்லி வட்டாரத்தில்.

.

.

மேலும் படிக்க

.

.

அமித் ஷா பேரம்... ஆடிப் போன ஸ்டாலின்

.

டிஜிட்டல் திண்ணை: சசிகலாவை சந்தித்த இபிஎஸ் மனைவி ராதா-ஓபிஎஸ் மனைவி விஜயலட்சுமி

.

.

வளர்மதியிடம் சீறிய எடப்பாடி

.

தேர்தல் முடிவுகளுக்கு அப்பால்…

.

இடைத்தேர்தல் கணிப்பு: முந்துவது யார்?

.

.

புதன், 22 மே 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon