மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, ஞாயிறு, 31 மே 2020

சர்ச்சை மீம்: மன்னிப்பு கேட்ட விவேக் ஓபராய்

சர்ச்சை மீம்: மன்னிப்பு கேட்ட விவேக் ஓபராய்

மக்களவைத் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகளை மையமாகக் கொண்டு பலவிதமான விமர்சனங்கள் எழுந்துவருகின்றன. இந்நிலையில் இது தொடர்பாக விவேக் ஓபராய் பகிர்ந்த மீம் ஒன்று நடிகை ஐஸ்வர்யா ராயின் தனிப்பட்ட வாழ்க்கையை விமர்சிக்கும் வகையில் அமைந்து சர்ச்சையைக் கிளப்பியது.

தேர்தலுக்கு முந்தைய, பிந்தைய கருத்துக்கணிப்புகளுக்கும் தேர்தல் முடிவுகளுக்கும் சம்மந்தமில்லை என்று சொல்வதற்காக ஐஸ்வர்யா ராயின் வாழ்க்கையைப் பற்றி மோசமான விமர்சனத்தை வைத்ததற்காக விவேக் ஓபராய்க்கு எதிராக கடும் கண்டனங்கள் எழுந்துவருகின்றன. தேசிய மகளிர் ஆணையம் இது தொடர்பாக விவேக் ஓபராய்க்கு நோட்டீஸ் அனுப்பியது.

மகளிர் ஆணையம் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், " விவேக் ஓபராயின் பதிவு மிகவும் குற்றமானது, நெறிமுறைகளை மீறியது, பெண்களின் மாண்பு மீதும், பெண்கள் மீதும் அவர் எந்த அளவுக்கு அவமரியாதை வைத்துள்ளார் என்பதை காட்டுகிறது" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் இன்று (மே 21) சர்ச்சைக்குரிய மீம்ஸை பகிர்ந்ததற்காக விவேக் ஓபராய் மன்னிப்பு கேட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், “சில நேரங்களில் முதலில் பார்க்கும்போது, ஒரு விஷயம் விளையாட்டுத்தனமாகவும், யாரையும் பாதிக்காமலும் இருக்கும். பலருக்கு அவ்வாறு இருப்பதில்லை. நான் கடந்த 10 ஆண்டுகளாக சமூகத்தில் மிகவும் விளிம்புநிலையில் இருக்கும் 2 ஆயிரம் ஏழைக் குழந்தைகளுக்கு நல்ல வாழ்வை பெற்றுக் கொடுத்திருக்கிறேன்.

நான் ஒருபோதும் பெண்களுக்கு எதிராக அவமரியாதை செய்தேன் என்பதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. நான் வெளியிட்ட மீம்ஸ் ஒரு பெண்ணை பாதித்து எரிச்சலடைய வைத்திருந்தால்கூட அதற்கு பரிகாரம் தேடுகிறேன். மன்னிப்பு கோருகிறேன். என்னுடைய ட்வீட் நீக்கப்பட்டது” என்று பதிவிட்டுள்ளார்.

.

.

மேலும் படிக்க

.

.

வளர்மதியிடம் சீறிய எடப்பாடி

.

.

தெற்கில் பாஜகவைப் பின்னுக்குத் தள்ளுமா காங்கிரஸ்?

.

சோனியா திடீர் உற்சாகம்: காரணம் என்ன?

.

டிஜிட்டல் திண்ணை: ஸ்டாலினுக்கு அமித் ஷா தூது!

.

சென்னை: மனிதப் பிழையால் உருவான தண்ணீர்ப் பஞ்சம்!

.

.

செவ்வாய், 21 மே 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon