மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, திங்கள், 25 மே 2020

தமிழகம்: திமுக கூட்டணிக்கே சாதகம்!

தமிழகம்: திமுக கூட்டணிக்கே சாதகம்!

தமிழகத்தில் மக்களவைத் தேர்தலில் பெரும்பாலான தொகுதிகளில் திமுக கூட்டணியே வெற்றி பெறும் என்று தேர்தலுக்குப் பிந்தைய வாக்குக் கணிப்புகள் கூறியுள்ளன.

17ஆவது மக்களவையைத் தேர்ந்தெடுப்பதற்கான ஏழு கட்டத் தேர்தல் முடிந்துள்ள நிலையில், தேர்தலுக்குப் பிந்தைய வாக்குக் கணிப்புகள் வெளியாகியுள்ளன. நேற்று (மே 19) வெளியிடப்பட்ட பல்வேறு முக்கியக் கருத்துக்கணிப்புகளும் மீண்டும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியே ஆட்சிக்கு வரும் என்று கூறியுள்ளன. ஆனால், தமிழகத்தில் காங்கிரஸ் அங்கம் வகிக்கும் திமுக கூட்டணிதான் வெற்றி பெறும் என்று அந்த ஆய்வின் முடிவுகள் கூறுகின்றன.

தேர்தலுக்கு முன்பு வெளியான பல்வேறு ஆய்வுகளும் தமிழகத்தில் பெரும்பான்மை இடங்களில் திமுக கூட்டணி வெல்லும் என்று கூறியிருந்த நிலையில், தேர்தலுக்குப் பிந்தைய வாக்கு கணிப்பிலும் திமுக கூட்டணியே தமிழகத்தில் அதிக தொகுதிகளை வெல்லும் என்று வாக்குக் கணிப்புகள் கூறுகின்றன. எந்ததெந்த ஆய்வுகள் தமிழகத்தில் எந்தக் கூட்டணிக்கு அதிக இடங்களை வெல்லும் என்று சொல்லியுள்ளது என்பதைக் காணலாம். தமிழகத்தில் வேலூர் தவிர்த்து 38 தொகுதிகளுக்குத் தேர்தல் நடந்துள்ளது.

டைம்ஸ் நவ் - வி.எம்.ஆர்

அதிமுக கூட்டணி - 9 (பாஜக 2)

திமுக கூட்டணி - 29 (காங்கிரஸ் 6)

மற்றவை - 0

நியூஸ் 18 - ஐ.பி.எஸ்.ஓ.எஸ்

அதிமுக கூட்டணி - 14 - 16 (பாஜக 1 முதல் 2)

திமுக கூட்டணி - 22 - 24 (காங்கிரஸ் 3 முதல் 5)

மற்றவை- 0

மை ஏக்சீஸ்

அதிமுக கூட்டணி - 0 - 4

திமுக கூட்டணி - 34 - 38

மற்றவை - 0

சாணக்யா - நியூஸ் 24

அதிமுக கூட்டணி - 6

திமுக கூட்டணி - 31

மற்றவை - 1

ரிபப்ளிக் டிவி

அதிமுக கூட்டணி - 11

திமுக கூட்டணி - 27

மற்றவை - 0

அதேபோல, மற்ற மாநிலக் கட்சிகளைப் பொறுத்தவரையில் மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜியின் திருணமூல் காங்கிரஸ் கட்சியும், உத்தரப் பிரதேசத்தில் பகுஜன் சமாஜ் - சமாஜ்வாதி கட்சியும், ஆந்திராவில் ஜெகன்மோகன் ரெட்டி, சந்திரபாபு நாயுடுவின் கட்சியும், தெலங்கானாவில் சந்திரசேகர ராவின் கட்சியும் கணிசமான தொகுதிகளை வெல்லும் என்பதும் பெரும்பாலான ஆய்வுகளின் கணிப்பாக உள்ளது.

.

.

மேலும் படிக்க

.

.

அமமுகவின் க்ளைமாக்ஸ் வியூகம்- சமாளித்தாரா செந்தில்பாலாஜி?

.

ஸ்டாலின் –மம்தாவுக்கு இடையே போட்டி!

.

.

வாக்கு கணிப்பு: பாஜகவுக்கு வெற்றியா?

.

ஸ்பெயின் ரசிகர்களைக் கவர்ந்த தனுஷ்

.

டிஜிட்டல் திண்ணை: கமலின் நாக்கு- அமைச்சரை பாராட்டிய முதல்வர்!

.

.

திங்கள், 20 மே 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon