மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, திங்கள், 16 செப் 2019

நீர்த் தட்டுப்பாடு: ஆறு மாநிலங்களுக்கு எச்சரிக்கை!

நீர்த் தட்டுப்பாடு: ஆறு மாநிலங்களுக்கு எச்சரிக்கை!

அணைகளில் நீர்த் தேக்கம் மிக மோசமான நிலைக்குக் குறைந்து வரும் நிலையில் தமிழகம் உட்பட ஆறு மாநிலங்களுக்கு வறட்சி குறித்த எச்சரிக்கையையும் ஆலோசனைகளையும் மத்திய அரசு வழங்கியுள்ளது. மேலும், தண்ணீரைச் சிக்கனமாகப் பயன்படுத்தும்படி இம்மாநிலங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

வறட்சியைச் சமாளிப்பதற்கான ஆலோசனைகள் மே 17ஆம் தேதியன்று தமிழகத்துக்கு வழங்கப்பட்டது. இதைத்தொடர்ந்து குஜராத், கர்நாடகம், மகாராஷ்டிரம், ஆந்திரப் பிரதேசம், தெலங்கானா ஆகிய மாநிலங்களுக்கும் வறட்சிக்கான எச்சரிக்கையும் ஆலோசனைகளும் அனுப்பப்பட்டுள்ளதாக மத்திய நீர் ஆணையத்தின் உறுப்பினர் எஸ்.கே.ஹல்தார் தெரிவித்துள்ளார்.

கடந்த 10 ஆண்டுகளில் அணைகளிலிருந்த சராசரி நீர் இருப்பை விட தற்போது 20 விழுக்காடு குறைவாக உள்ளது. தண்ணீர் மாநிலப் பட்டியலில் வருகிறது. ஆகையால், அணைகளில் மீண்டும் நீர் நிரம்பும் வரை ஆறு மாநிலங்களிலும் நீரை குடிப்பதற்கு மட்டும் பயன்படுத்தும்படி மத்திய நீர் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. நாடு முழுவதிலும் உள்ள 91 முக்கிய அணைகளை மத்திய நீர் ஆணையம் கண்காணித்து வருகிறது.

மே 16ஆம் தேதியன்று மத்திய நீர் ஆணையம் வெளியிட்ட தகவல்களின்படி, அணைகளில் ஒட்டுமொத்தமாக 35.99 பில்லியன் கியூபிக் மீட்டர் அளவுக்கு நீர் இருப்பதாகத் தெரியவருகிறது. 91 முக்கிய அணைகளின் ஒட்டுமொத்த கொள்திறன் 161.993 பில்லியன் கியூபிக் மீட்டராகும். குஜராத்தில் 10 அணைகளும், மகாராஷ்டிராவில் 17 அணைகளும், தமிழகத்தில் ஆறு அணைகளும், ஆந்திரப் பிரதேசத்தில் ஓர் அணையும், தெலங்கானாவில் இரண்டு அணைகளும், கேரளத்தில் ஆறு அணைகளும், கர்நாடகத்தில் 14 அணைகளும் உள்ளன.

இதேபோல, தண்ணீர் பற்றாக்குறையைச் சமாளிப்பதற்காக சென்னை மக்கள் ஷவர்களில் குளிப்பதைத் தவிர்க்க வேண்டுமென்று சென்னை குடிநீர் வாரியமும் அறிவுறுத்தியுள்ளது. மேலும், வெஸ்டர்ன் டாய்லெட்டுகளில் அதிக நீர் வீணடிக்கப்படுவதைத் தவிர்க்க வேண்டுமெனவும் சென்னை குடிநீர் வாரியம் சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

.

.

மேலும் படிக்க

.

ஸ்பெயின் ரசிகர்களைக் கவர்ந்த தனுஷ்

.

டிஜிட்டல் திண்ணை: கமலின் நாக்கு- அமைச்சரை பாராட்டிய முதல்வர்!

.

விமர்சனம்: மிஸ்டர் லோக்கல்!

.

மோடி காய்ச்சல்: சந்திரபாபு நாயுடு பரபரப்பு!

.

தினகரனுக்கு எடப்பாடி சொன்ன செய்தி!

.

.

ஞாயிறு, 19 மே 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon