மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, திங்கள், 16 செப் 2019

கதாசிரியரான விஜய் சேதுபதி

கதாசிரியரான விஜய் சேதுபதி

விஜய் சேதுபதி கதை எழுதி தயாரிக்கும் படத்துக்கு ‘சென்னை பழநி மார்ஸ்’ என்ற வித்தியாசமான தலைப்பிடப்பட்டிருக்கிறது. மேற்கு தொடர்ச்சி மலை படத்தை தொடர்ந்து இப்படத்தை தயாரித்திருக்கிறார்.

2015ஆம் ஆண்டு விஜய் சேதுபதி தயாரித்து, நடித்த ஆரஞ்சு மிட்டாய் திரைப்படம் விமர்சகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்தின் கதையை இதன் இயக்குநர் பிஜு விஸ்வநாத்துடன் இணைந்து விஜய் சேதுபதியும் எழுதியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்தில் தனிமையிலிருக்கும் வயதான தந்தை கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி நடித்திருந்தார். ஆனால் இப்படம் எதிர்பார்த்த அளவு ரசிகர்களிடம் வரவேற்பு பெறவில்லை.

இந்நிலையில், மீண்டும் இக்கூட்டணி இணைந்துள்ளது. பிஜு விஸ்வநாத்-விஜய் சேதுபதி இணைந்து எழுதும் கதைக்கு சென்னை பழநி மார்ஸ் எனத் தலைப்பிடப்பட்டிருக்கிறது. விஜய் சேதுபதியுடன் இணைந்து இப்படத்தை தயாரிக்கும் இயக்குநர் பிஜு விஸ்வநாத், ஒளிப்பதிவு மற்றும் படத்தொகுப்பு பணிகளையும் ஏற்றுள்ளார்.

இப்பிறப்பின் வெற்றி என்பது சென்ற பிறவியில் நாம் அந்த நோக்கத்திற்காக எடுத்த முயற்சியின் விளைவே என்ற கருத்தை மையமப்படுத்தி உருவாகியிருக்கிறது இப்படம். ரோட் மூவி, அட்வெஞ்சர், பிளாக் காமெடி என மூன்று ஜானர்களில் இப்படம் உருவாகியுள்ளது.

முதன்மைக் கதாபாத்திரங்களில் பிரவீன் ராஜா, ராஜேஷ் கிரிபிரசாத், வசந்த் மாரிமுத்து மற்றும் பலர் நடித்துள்ளனர். நிரஞ்சன் பாபு இசையமைக்கும் இப்படத்தின் இசை உரிமையை திங்க் மியூசிக் நிறுவனம் வாங்கியுள்ளது. மே 22ஆம் தேதி இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகவுள்ளது.

.

.

மேலும் படிக்க

.

விமர்சனம்: மிஸ்டர் லோக்கல்!

.

டிஜிட்டல் திண்ணை: கெஞ்சல், மிரட்டல்- கமல் வெளியிடாத ரகசியத் தகவல்!

.

ஸ்பெயின் ரசிகர்களைக் கவர்ந்த தனுஷ்

.

தினகரனுக்கு எடப்பாடி சொன்ன செய்தி!

.

மோடி காய்ச்சல்: சந்திரபாபு நாயுடு பரபரப்பு!

.

.

சனி, 18 மே 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon