மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, சனி, 11 ஜூலை 2020

ரசிகர்களின் ஆதரவு: வாட்சன் நெகிழ்ச்சி!

ரசிகர்களின் ஆதரவு: வாட்சன் நெகிழ்ச்சி!

மே 12ஆம் தேதியன்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும், மும்பை இந்தியன்ஸ் அணிக்கும் இடையே ஹைதராபாத்திலுள்ள ராஜிவ் காந்தி மைதானத்தில் ஐபிஎல் இறுதிப்போட்டி நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி 149 ரன்களை குவித்தது. பின்னர் பேட்டிங் செய்த சென்னை அணி 148 ரன்களை குவித்து இரண்டு ரன் வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பை நழுவவிட்டது.

ஆரம்பம் முதலாகவே நேர்த்தியாக விளையாடிய ஷேன் வாட்சன் 59 பந்துகளில் 80 ரன்களைக் குவித்தார். 80 ரன்களுக்கு பின் ரன் அவுட் ஆகி ஆட்டமிழந்தார். விளையாடும்போது அவருக்கு முழங்காலில் காயம் ஏற்பட்டதால் அவரால் வேகமாக ஓடமுடியவில்லை. ஷேன் வாட்சன் காயத்துடனும், ரத்தத்துடனும் விளையாடிய புகைப்படத்தை சமூக ஊடகங்களில் வெளியிட்ட ஹர்பஜன் சிங் அவருக்கு 6 தையல்கள் போடப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.

இதன்பின் சென்னை அணியின் ரசிகர்கள் மட்டுமல்லாமல் இதர அணிகளின் ரசிகர்களும் வாட்சனை பாராட்டி அவர் விரைவில் குணமடைய வேண்டுமென்று வாழ்த்துகளை தெரிவித்தனர். இந்நிலையில் ஷேன் வாட்சன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார்.

அதில், “கடந்த இரண்டு நாட்களாக எனக்கு வழங்கப்பட்டு வரும் அன்புக்கும், ஆதரவுக்கும், வாழ்த்துகளுக்கும் நான் அனைவருக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். மும்பை அணியை வெல்லும் தருணத்தை ஏறத்தாழ நாங்க எட்டிவிட்டோம். இருந்தாலும் சிறப்பான இறுதிப்போட்டியாக இருந்தது.

அடுத்த ஆண்டு மீண்டும் வந்து ஒருபடி மேலே செல்ல விரும்புகிறேன். அனைவருக்கும் மீண்டும் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். விசில் போடு” என்று தெரிவித்துள்ளார். அடுத்த ஆண்டும் ஐபிஎல் போட்டியில் கலந்துகொள்ளவிருப்பதாக வாட்சன் தெரிவித்ததால் சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.

.

.

மேலும் படிக்க

.

ஓட்டப்பிடாரம்: வீட்டுக்கு வீடு அதிமுகவின் டெலிவரி அடையாளம்!

.

இந்தியன் 2 ஷங்கரின் அடுத்த பிளான்!

.

போலீசார் மிரட்டல்: பைனான்ஸ் அதிபர் தற்கொலை!

.

டிஜிட்டல் திண்ணை: அள்ளிவீசும் அதிமுக, அமமுக; கிள்ளிக் கொடுக்கும் திமுக

.

அஜித் 60ல் இணையும் இளம் இசையமைப்பாளர்!

.

.

வியாழன், 16 மே 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon