மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, சனி, 23 நவ 2019

ஹைட்ரோ கார்பன் அனுமதி: ஒப்பாரி போராட்டம்!

ஹைட்ரோ கார்பன் அனுமதி: ஒப்பாரி போராட்டம்!

ஹைட்ரோகார்பன் எடுக்க வேதாந்தா குழுமத்துக்கு மத்திய அரசு அனுமதி அளித்ததை எதிர்த்து, திருவாரூர் மாவட்டத்தில் ஒப்பாரிப் போராட்டம் நடத்தினர் பெண்கள்.

தமிழகத்தில் விழுப்புரம், நாகப்பட்டினம், கடலூர், திருவாரூர் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் ஆகிய பகுதிகளில் உள்ள 274 இடங்களில் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்துக்கு வேதாந்தா குழுமத்துக்கு அனுமதி அளித்துள்ளது மத்திய அரசு. அனுமதி அளிக்கப்பட்ட இடங்களில் சுமார் 3,500 அடி முதல் 6,000 அடி வரை கிணறுகள் விரைவில் அமைக்கப்படவுள்ளதாகத் தகவல் வெளியானது. கடந்த 12ஆம் தேதியன்று, நாகப்பட்டினம் வட்டாரத்தில் 158 கிணறுகள் அமைப்பதற்குக் அனுமதி வழங்கப்பட்டது. இதனால் காவிரி டெல்டா பகுதியில் விவசாயம் பாதிக்கப்படுமென்று எதிர்ப்பு தெரிவித்துள்ளனர் அப்பகுதி மக்கள்.

தங்கள் எதிர்ப்பை முன்னெடுக்கும்விதமாக, நேற்று (மே 15) திருவாரூர் மாவட்டம் திருக்களார் பகுதியில் ஒப்பாரிப் போராட்டம் நடத்தினர் பெண்கள். ஹைட்ரோ கார்பன் திட்டத்தைச் செயல்படுத்த முனையும் மத்திய, மாநில அரசுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஒப்பாரிப் பாடல்கள் பாடினர். நான்காம் சேத்தி என்ற பகுதியில் வயலில் இறங்கிப் போராட்டம் நடத்தினர் விவசாயிகள். அப்போது, காவிரி டெல்டா மாவட்டங்களைப் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டுமென்று குரல் எழுப்பினர்.

இது தொடர்பாகப் பேசிய மீத்தேன் எதிர்ப்பு திட்டக் கூட்டமைப்பு தலைமை ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் ஜெயராமன், ஹைட்ரோ கார்பன் திட்ட அனுமதிக்கு எதிர்ப்பு தெரிவித்து விரைவில் ஒட்டுமொத்த காவிரி டெல்டா மாவட்ட மக்களைத் திரட்டிப் போராட்டம் நடத்தவிருப்பதாகத் தெரிவித்தார். வரும் 19ஆம் தேதியன்று மயிலாடுதுறையில் பொதுக்குழுக் கூட்டம் நடத்தி இது பற்றிய அறிவிப்பு வெளியிடப்படும் என்றார்.

.

.

மேலும் படிக்க

.

ஓட்டப்பிடாரம்: வீட்டுக்கு வீடு அதிமுகவின் டெலிவரி அடையாளம்!

.

இந்தியன் 2 ஷங்கரின் அடுத்த பிளான்!

.

போலீசார் மிரட்டல்: பைனான்ஸ் அதிபர் தற்கொலை!

.

டிஜிட்டல் திண்ணை: அள்ளிவீசும் அதிமுக, அமமுக; கிள்ளிக் கொடுக்கும் திமுக

.

அஜித் 60ல் இணையும் இளம் இசையமைப்பாளர்!

.

.

வியாழன், 16 மே 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon