மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, வியாழன், 21 நவ 2019

கேக் வெட்டிய விஜய்

கேக் வெட்டிய விஜய்

அட்லீ இயக்கத்தில், பெண்கள் கால்பந்தாட்ட குழுவின் பயிற்சியாளராக நடிகர் விஜய்யும், அவருக்கு ஜோடியாக நயன்தாராவும் நடிக்கும் தளபதி 63, பெரும் எதிர்பார்ப்புகளோடு உருவாகி வருகிறது. ரெபா மோனிகா ஜோன், டேனியல் பாலாஜி, யோகி பாபு, ஜாக்கி ஷ்ரோப், ஆனந்த ராஜ் என்று பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.

சில நாட்களுக்கு முன்பு இந்த படத்தில் நடிக்கும், ரெபா மோனிகா முகத்தில் காயங்களுடன், சிவப்பு நிற விளையாட்டு சீருடை அணிந்து, அவர் எடுத்த புகைப்படம் ஒன்றை வெளியிட்டிருந்தார், இதன் மூலம் அவர் தளபதி 63 இல், ஆசிட் வீச்சினால் பாதிக்கப்பட்ட பெண்ணாக நடிக்கிறார் என யூகங்கள் முன்வைக்கப்பட்டது.

இந்த நிலையில் படைவீரன், காளி ஆகிய திரைப்படங்களில் நடித்துள்ள அமிரிதா ஐயர் இந்த படத்தில் இணைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

படப்பிடிப்பிற்கு இடையே, அம்ரிதாவின் பிறந்தநாள் என்பதை அறிந்த விஜய், உடனடியாக கேக் வாங்கி வர செய்து, அவரது பிறந்தநாளைக் கொண்டாடியுள்ளனர். தளபதியுடன் பிறந்தநாள் கொண்டாடியதால், இரட்டிப்பு மகிழ்ச்சியில் இருக்கிறார் அம்ரிதா.

நடிகர் விஜய் தனது ரசிகர் பட்டாளத்தை, தன்னுடைய நடிப்புத் திறமையாலும், நடன அசைவுகளாலும் மட்டும் பெற்று விடவில்லை, அதையும் தாண்டி எளிமை மிக்க நல்ல மனிதர் என்னும் காரணத்தாலும் பலரது மனங்களையும் கொள்ளையடித்துள்ளார் என்கின்றனர் அவரது ரசிகர்கள்.

.

.

மேலும் படிக்க

.

ஓட்டப்பிடாரம்: வீட்டுக்கு வீடு அதிமுகவின் டெலிவரி அடையாளம்!

.

இந்தியன் 2 ஷங்கரின் அடுத்த பிளான்!

.

போலீசார் மிரட்டல்: பைனான்ஸ் அதிபர் தற்கொலை!

.

டிஜிட்டல் திண்ணை: அள்ளிவீசும் அதிமுக, அமமுக; கிள்ளிக் கொடுக்கும் திமுக

.

அஜித் 60ல் இணையும் இளம் இசையமைப்பாளர்!

.

.

வியாழன், 16 மே 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon