மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, வியாழன், 21 நவ 2019

பாஜகவுடன் பேசியதை ஸ்டாலின் மறுக்கவில்லை: ஜெயக்குமார்

பாஜகவுடன் பேசியதை ஸ்டாலின் மறுக்கவில்லை: ஜெயக்குமார்

பாஜகவுடன் பேசியதை ஸ்டாலின் நிரூபிக்கத்தான் சொல்கிறாரே தவிர மறுத்தாரா என்று அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி எழுப்பியுள்ளார்.

தூத்துக்குடியில் கடந்த 14ஆம் தேதி செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், பாஜகவுடன் திமுக பேசிவருவது உண்மைதான் என்று பேட்டியளித்திருந்தார். அடுத்த சில மணி நேரத்தில் அதற்கு பதில் அறிக்கை வெளியிட்ட ஸ்டாலின், “பாஜகவுடன் பேசி வருகிறேன் என்பதை நிரூபித்து விட்டால் அரசியலில் இருந்து விலக நான் தயாராக இருக்கிறேன். நிரூபிக்கத் தவறினால் நரேந்திர மோடியும், மாநில பாஜக தலைவராக இருக்கும் தமிழிசையும் அரசியலை விட்டு விலகத் தயாரா?” என்று கேள்வி எழுப்பி இருந்தார். இருப்பினும் தான் கூறியது உண்மைதான் என தமிழிசை மீண்டும் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக மதுரையில் இன்று (மே 16) செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார், “பாஜக ஸ்டாலினுடன் பேசவில்லை. ஸ்டாலின்தான் பாஜகவுக்கு காவடி தூக்கியிருக்கிறார். அனைத்து கட்சிகளுடனும் பேசிவருகிறார். ஒரே நேரத்தில் 9 படகுகளில் சவாரி செய்கிறார். அந்த 9 படகுகளும் ஓட்டைப் படகுகள். அதிகாரப் பசி, அதன்மூலம் பணம் சம்பாதிக்க வேண்டும் என்பதையே திமுக கொள்கையாக வைத்திருக்கிறதே தவிர, அவர்களுக்கு கொள்கை கிடையாது” என்று விமர்சித்தார்.

பாஜகவுடன் பேசியதை நிரூபித்தால் அரசியலை விட்டு விலகத் தயாராக இருக்கிறேன் என்று ஸ்டாலின் கூறியுள்ளாரே என்ற கேள்விக்கு, “பாஜகவுடன் பேசியதை நிரூபித்தால் அரசியலை விட்டு விலகத் தயாராக இருக்கிறேன் என்று கூறுகிறாரே தவிர பேசியதை மறுக்கிறாரா?. தான் பேசவில்லை என ஸ்டாலின் மறுக்கவில்லை. பேசியதை நிரூபிக்கச் சொல்லி சவால் விடும் அவர், பேசியது குறித்து சவால் விடவில்லை. இதுதொடர்பாக அவரிடம் கேள்வி எழுப்புங்கள்” என்று கூறியுள்ளார்.

மேலும் 7 பேரையும் விடுதலை செய்ய வேண்டும் என்பதுதான் தமிழக அரசின் நிலைப்பாடு எனவும், அமைச்சர் ராஜேந்திர பாலாஜி சாதாரண குடிமகனாகத்தான் தனது கருத்தைக் கூறினார் என்றும் அவர் தெரிவித்தார்.

.

.

மேலும் படிக்க

.

ஓட்டப்பிடாரம்: வீட்டுக்கு வீடு அதிமுகவின் டெலிவரி அடையாளம்!

.

இந்தியன் 2 ஷங்கரின் அடுத்த பிளான்!

.

போலீசார் மிரட்டல்: பைனான்ஸ் அதிபர் தற்கொலை!

.

டிஜிட்டல் திண்ணை: அள்ளிவீசும் அதிமுக, அமமுக; கிள்ளிக் கொடுக்கும் திமுக

.

அஜித் 60ல் இணையும் இளம் இசையமைப்பாளர்!

.

.

வியாழன், 16 மே 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon