மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, வியாழன், 21 நவ 2019

வில்லன் வேடத்தில் ஐஸ்வர்யா ராய்

வில்லன் வேடத்தில் ஐஸ்வர்யா ராய்

பாலிவுட் நடிகை ஐஸ்வர்யா ராய் இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் உருவாகிய எந்திரன் படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார். இப்படம் ரோபோ என்ற தலைப்பில் இந்தியிலும் வெளியாகியது. அதன்பின் அவர் தமிழில் நடிக்கவில்லை. மணிரத்னம் இயக்கிய இருவர் படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் ஐஸ்வர்யா ராய். அதன்பின் மணிரத்னம் இயக்கிய குரு, ராவணன் உள்ளிட்ட படங்களில் கதாநாயகியாக நடித்தார்.

ராஜ ராஜ சோழனின் வாழ்க்கையையும், சோழர் காலத்தையும் மையமாக வைத்து கல்கி கிருஷ்ணமூர்த்தி எழுதிய ‘பொன்னியின் செல்வன்’ நாவலுக்கு தனி ரசிகர் பட்டாளம் உண்டு. இந்த நாவலை தழுவி பொன்னியின் செல்வன் என்ற தலைப்பில் படத்தை உருவாக்க மணிரத்னம் முயற்சித்து வருகிறார். ஏற்கெனவே மகேஷ் பாபுவை வைத்து அவர் இப்படத்தை உருவாக்க முயன்றார். ஆனால் அம்முயற்சி தோல்வியில் முடிந்தது.

தற்போது மீண்டும் இப்படத்தை உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளார் மணிரத்னம். இப்படத்தில் ‘நந்தினி’ என்ற வில்லன் வேடத்தில் ஐஸ்வர்யா ராய் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சோழ பேரரசின் பொருளாளராக இருந்த பெரிய பழுவேட்டரையரின் மனைவி கதாபாத்திரம்தான் நந்தினி.

பொன்னியின் செல்வன் நாவலில், அதிகாரப் பசியில் இருக்கும் பெண்ணாக நந்தினி கதாபாத்திரம் வலம் வருகிறது. சோழ பேரரசை வீழ்த்த வேண்டும் என்ற முயற்சியில் ஈடுபடுபவர் நந்தினி. இப்படத்தில் ஜெயம் ரவி, விக்ரம், அமிதாப் பச்சன், அமலா பால், மோகன் பாபு உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

.

.

மேலும் படிக்க

.

ஓட்டப்பிடாரம்: வீட்டுக்கு வீடு அதிமுகவின் டெலிவரி அடையாளம்!

.

இந்தியன் 2 ஷங்கரின் அடுத்த பிளான்!

.

போலீசார் மிரட்டல்: பைனான்ஸ் அதிபர் தற்கொலை!

.

டிஜிட்டல் திண்ணை: அள்ளிவீசும் அதிமுக, அமமுக; கிள்ளிக் கொடுக்கும் திமுக

.

அஜித் 60ல் இணையும் இளம் இசையமைப்பாளர்!

.

.

வியாழன், 16 மே 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon