மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, சனி, 23 நவ 2019

அரசுப் பணிக்குத் தகுதியற்ற பட்டப்படிப்புகள்!

அரசுப் பணிக்குத் தகுதியற்ற பட்டப்படிப்புகள்!

தமிழகத்திலுள்ள பல்கலைக்கழகங்களில் வழங்கப்படும் 56 பட்டப்படிப்புகளை அரசுப் பணிகளுக்கான கல்வித் தகுதியாக ஏற்றுக்கொள்ள முடியாது என்று அறிவிப்பு வெளியிட்டுள்ளது தமிழக அரசு.

அரசுப் பணிகளுக்குத் தகுதியான பட்டப்படிப்புகள் தொடர்பாக, சமீபத்தில் தமிழக உயர்கல்வித் துறை அரசாணையொன்றைப் பிறப்பித்தது. புதிதாக அறிமுகம் செய்யப்படும் படிப்புகள், அந்தந்த துறை சார்ந்த மூலப்படிப்புகளின் பாடத்திட்டத்தில் குறைந்தபட்சம் 70 சதவிகிதப் பாடங்களைக் கொண்டிருக்க வேண்டும். அவ்வாறு இல்லையென்றால் அந்த பட்டப்படிப்பை அரசுப் பணிக்கான கல்வித் தகுதியாக ஏற்க முடியாது. இதன் அடிப்படையில், தமிழக உயர்கல்வித் துறையால் அமைக்கப்பட்ட குழு அளித்த பரிந்துரைகளின்படி அரசுப் பணிக்குத் தகுதியற்ற பட்டப்படிப்புகளின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இவற்றில் தமிழகத்தைச் சேர்ந்த பல்கலைக்கழகங்களில் வழங்கப்படும் 56 படிப்புகள் இடம்பெற்றுள்ளன.

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் சந்தை மேலாண்மை, சர்வதேச வணிகம், இணைய வணிகம், மனிதவள மேம்பாடு, உலக மேலாண்மை, நிதி மேலாண்மை பிரிவுகளில் எம்பிஏ பட்டம் வழங்கப்படுகிறது. இவை அனைத்தும் அரசு பொதுத் துறைப் பணிகளுக்குத் தேவையான எம்பிஏ கல்வித்தகுதிக்கு இணையானதல்ல என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சிதம்பரம் பல்கலைக்கழகத்தில் வழங்கப்படும் இரட்டை பட்டப்படிப்புகளும் தமிழக அரசுப் பணிகளுக்கான தகுதியாக ஏற்றுக்கொள்ளப்படாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல பாரதியார் பல்கலைக்கழகம், திருவள்ளுவர் பல்கலைக்கழகம், பெரியார் பல்கலைக்கழகம், மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் ஆகியவற்றின் சார்பில் வழங்கப்படும் எம்எஸ்சி (அப்ளைடு) நுண்உயிரியல், மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் உள்ள எம்எஸ்சி ஒருங்கிணைந்த உயிரியல், எம்எஸ்சி உயிரியல் படிப்புகள், காந்திகிராமம் கிராம நிறுவனம் சார்பில் வழங்கப்படும் எம்எஸ்சி பயன்முறை உயிரியல், பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் உள்ள 5 ஆண்டுகள் ஒருங்கிணைந்த எம்எஸ்சி உயிர் அறிவியல், அண்ணாமலைப் பல்கலைக்கழகத்திலுள்ள 5 ஆண்டுகள் ஒருங்கிணைந்த எம்எஸ்சி விலங்கியல், எம்எஸ்சி கடல்வாழ் நுண் உயிரியல் ஆகிய படிப்புகள் அரசுப் பணிக்கான எம்எஸ்சி விலங்கியல் கல்வித் தகுதிக்கு இணையானதாக எடுத்துக்கொள்ளப்படாது.

இதனை மாணவர்கள் தெரிந்துகொள்ளும் வகையில், அனைத்து பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் உள்ள அறிவிப்புப் பலகைகளில் விவரங்கள் வெளியிடப்பட வேண்டுமென்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

.

.

மேலும் படிக்க

.

ஓட்டப்பிடாரம்: வீட்டுக்கு வீடு அதிமுகவின் டெலிவரி அடையாளம்!

.

இந்தியன் 2 ஷங்கரின் அடுத்த பிளான்!

.

போலீசார் மிரட்டல்: பைனான்ஸ் அதிபர் தற்கொலை!

.

டிஜிட்டல் திண்ணை: அள்ளிவீசும் அதிமுக, அமமுக; கிள்ளிக் கொடுக்கும் திமுக

.

அஜித் 60ல் இணையும் இளம் இசையமைப்பாளர்!

.

.

வியாழன், 16 மே 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon