மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, புதன், 23 செப் 2020

கோதுமை: கொள்முதல் இலக்கு நிறைவேறுமா?

கோதுமை: கொள்முதல் இலக்கு நிறைவேறுமா?

மத்திய அரசு இதுவரையில் 29 மில்லியன் டன் அளவிலான கோதுமையை விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்துள்ளது.

நடப்பு 2019-20 சந்தைப் பருவத்தில் மொத்தம் 35.7 மில்லியன் டன் அளவிலான கோதுமையைக் கொள்முதல் செய்ய அரசு இலக்கு நிர்ணயம் செய்துள்ளது. இந்த ஆண்டில் 100 மில்லியன் டன் அளவிலான கோதுமை உற்பத்தி செய்யப்படும் என்று மதிப்பிடப்பட்டுள்ளதால் இந்த கொள்முதல் இலக்கை அடையும் முயற்சியில் அரசு உள்ளது. 2019 ஏப்ரல் முதல் 2020 மார்ச் வரையிலான இந்த ஆண்டுக்கான சந்தைப் பருவத்தில் இதுவரையில் மொத்தம் 29.26 மில்லியன் டன் அளவிலான கோதுமை விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.

அரசு நலத் திட்டங்களின் கீழ் கோதுமைக்கான தேவையைப் பூர்த்தி செய்யும் நோக்கத்தில் குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு இந்திய உணவுக் கழகமும், மாநில அரசுகளின் கொள்முதல் மையங்களும் கொள்முதல் பணியில் ஈடுபட்டு வருகின்றன. இந்த ஆண்டுக்கான கோதுமையின் குறைந்தபட்ச ஆதரவு விலை குவிண்டால் ஒன்றுக்கு ரூ.1,840 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

பஞ்சாப் மாநிலத்தில் மட்டும் 12.1 மில்லியன் டன் அளவிலான கோதுமை கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. மேலும், ஹரியானாவில் 9 மில்லியன் டன் கோதுமையும், மத்தியப் பிரதேசத்தில் 5.3 மில்லியன் டன் கோதுமையும் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.

.

.

மேலும் படிக்க

.

ஓட்டப்பிடாரம்: வீட்டுக்கு வீடு அதிமுகவின் டெலிவரி அடையாளம்!

.

இந்தியன் 2 ஷங்கரின் அடுத்த பிளான்!

.

போலீசார் மிரட்டல்: பைனான்ஸ் அதிபர் தற்கொலை!

.

டிஜிட்டல் திண்ணை: அள்ளிவீசும் அதிமுக, அமமுக; கிள்ளிக் கொடுக்கும் திமுக

.

அஜித் 60ல் இணையும் இளம் இசையமைப்பாளர்!

.

.

வியாழன், 16 மே 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon