மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, புதன், 26 பிப் 2020

ஒன்பிளஸுக்கு போட்டியாக ஏசஸ்!

ஒன்பிளஸுக்கு போட்டியாக ஏசஸ்!

இரு தினங்களுக்கு முன்பு ஒன்பிளஸ் நிறுவனம் தனது ஒன்பிளஸ் 7, ஒன்பிளஸ் 7 ப்ரோ ஆகிய ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்தியது. இந்த மொபைல்களுக்கு போட்டியாக ஷோமி, ஏசஸ் ஆகிய நிறுவனங்கள் தத்தம் ஸ்மார்ட்போன்களை வெளியிட திட்டமிட்டுள்ளனர். ஏசஸ் நிறுவனம் இன்று ஜென்போன் 6 மாடல் ஸ்மார்ட்போனை இரவு 11.30 மணிக்கு அறிமுகப்படுத்தவுள்ளது.

இந்நிலையில் ஏசஸ் நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில், ஜென்போன் 6 மாடலில் 5000 mAh திறன் கொண்ட பேட்டரி இருப்பதாக தெரிவித்துள்ளது. ஒன்பிளஸின் 7, 7 ப்ரோ மாடல்களிலோ 3700 mAh திறன் கொண்ட பேட்டரிகள் மட்டுமே உள்ளன. இதைக் கேலி செய்யும் விதமாக ஏசஸ் இத்தகவலை ட்விட்டரில் பதிவு செய்துள்ளது.

ஜென்போன் 6 மாடலில் குவால்காம் ஸ்னாப்ட்ராகன் 855 சிப்செட் இருப்பதாக ஏற்கெனவே ஏசஸ் நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது. இந்த மொபைலில் பாப் அப் செல்ஃபி கேமரா இருப்பதாகவும் சில செய்திகள் வெளியாகியுள்ளன. பேட்டரி திறன் ரீதியாக மட்டுமல்லாமல் விலை ரீதியாகவும் ஒன்பிளஸ் மாடல்களுக்கு ஏசஸ் கடும் போட்டி கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஒன்பிளஸ் 7 மாடலுக்கு ஆரம்ப விலையாக ரூ.32,999 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஜென்போனின் விலை இதற்கு நிகராகவோ, இதை விட குறைவாகவோ இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், ஷோமி நிறுவனமும் இப்பிரிவில் ஒரு ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தி போட்டியை வலுப்படுத்த திட்டமிட்டுள்ளது.

.

.

மேலும் படிக்க

.

ஓட்டப்பிடாரம்: வீட்டுக்கு வீடு அதிமுகவின் டெலிவரி அடையாளம்!

.

இந்தியன் 2 ஷங்கரின் அடுத்த பிளான்!

.

போலீசார் மிரட்டல்: பைனான்ஸ் அதிபர் தற்கொலை!

.

டிஜிட்டல் திண்ணை: அள்ளிவீசும் அதிமுக, அமமுக; கிள்ளிக் கொடுக்கும் திமுக

.

அஜித் 60ல் இணையும் இளம் இசையமைப்பாளர்!

.

.

வியாழன், 16 மே 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon