மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, சனி, 23 நவ 2019

ஹலோ ரஜினியா? உங்களுக்கு அவார்டு வந்திருக்கு... :அப்டேட் குமாரு

ஹலோ ரஜினியா? உங்களுக்கு அவார்டு வந்திருக்கு... :அப்டேட் குமாரு

தமிழ்நாட்டோட இன்றைய மிகப்பெரிய பிரச்னையே தண்ணி பிரச்னை தான். அதைத்தொடர்ந்து ஹைட்ரோ கார்பன் மேட்டர், ஏழு தமிழர்கள் விடுதலையில் பாரபட்சம், எலெக்‌ஷனுக்கு காசு குடுக்குறதுன்னு வரிசைகட்டி நிக்குது. இதுல, கோட்சே இந்துவா? அப்ப தீவிரவாதி இல்லையா. காந்தியை ஏன் கொன்னாருன்னு பேசிட்டு இருக்காய்ங்க. இதுகூட பரவால்ல சார், கமல் கோட்சே பத்தி பேசுனத, எல்லா மீடியாவுக்கு மநீம மெயில் வாட்ஸப்னு அனுப்பி உட்டாய்ங்க. இப்ப என்னடான்னா, மீடியா ஏன் இப்டி பண்ணாங்கன்னு தெர்லயேன்றார் கோர்ட்டுல. இவரே அனுப்புவாராம். பப்ளிஷ் பண்ணா, இவரே ஏன்னு கேப்பாராம். கமல் பேசுனதும் மோடி வரைக்கு பதில் சொல்லும்போதே லைட்டா டவுட் வந்துச்சு இதுல ஏதோ உள்குத்து இருக்குமோன்னு. கமல் உருவாக்குன இந்த டொண்டி டொண்டி மேட்ச்ல அவுட் ஆவாத ஒரே ஆள் ரஜினி மட்டுந்தான். இதுக்கெல்லாம் பதில் சொல்லமுடியாதுன்னு உசாரா கழண்டுக்கிட்டார். எனவே, இந்த வார மேன் ஆஃப் தி பொலிடிக்ஸ் விருதை அரசியலிலேயே இல்லாத ரஜினிக்கு கொடுக்கிறான் இந்த குமாரு. என்னது நான் அவார்டு குடுக்கக்கூடாதா? இன்னைக்கு அரசியலை முடிவு பண்றதே என்னை மாதிரி மீம்ஸ் திருடர்கள் தான் பாஸு. போய் அப்டேட்டைப் படிங்க.

கோழியின் கிறுக்கல்!!

உங்களை அறிவாளி என்று நம்பிக் கொண்டிருப்பவருடன் அதிகம் பேசி தொலைக்காதீர்கள்!!

பிறகு அவர் உண்மையை உணர்ந்து கொள்ள நேரிடும்!!!

குழந்தை அருண்

இதுக்கு மேல எனக்கென்னனே கல்யாணம், 38 வயசாகுது, ஜெராக்ஸ் கடையோட ரீசார்ஜ் கடையும் வைச்சா ஓட்டிருவேன், என்ன எவனே கட்டிப்பான் என்று அந்த அக்கா என் அப்பாவிடம் சொன்ன போது செருப்பால் அடித்தது போல் இருந்தது.

என் காதல், தோல்வி, தனிமையெல்லாம் அதன் முன் காமெடியாகிப் போனது.

-ராஜூ முருகன்

இரா.சரவணன்

தண்ணீர் தட்டுப்பாட்டை தீர்க்க அரசின் பல வேண்டுகோள்:

1.ஷவரில் குளிக்காதீங்க

2.வெஸ்டர்ன் டைப் தவிர்த்து இண்டியன் டாய்லெட் பயன்படுத்துங்க

3.காரை துடைக்க ஈரத்துண்டு

4.வாசல் தெளிக்க உப்புநீர்

மக்களின் ஒரே வேண்டுகோள்:

ஏரி குளங்களை தூர்வாரி நீர்நிலைகளை காப்பாத்துங்க

mohanram.ko

இங்கே தண்ணீர் பஞ்சமெல்லாம் இல்லை, போன் பண்ணா உடனே கேன் வாட்டர் வந்திடும் னு சொல்றாங்க, வீட்டு ஓனரம்மா...

Smiley Azam

உங்கள் உள்ளத்தில் நன்றியுணர்வு பிறக்க உங்களுக்கு கீழ் உள்ளவர்களை பார்த்தால்

போதுமானது !!!

யுகராஜேஸ்®

தமிழக அரசு மழை வேண்டி யாகம் செய்வது ஒருபுறம் இருந்தாலும், பல மாதங்களாக கூட்டப்படாத காவிரி மேலாண்மை வாரியத்தை கூட்டவும், வாரியத்துக்கு நிரந்த தலைவரை நியமிக்கவும் மத்திய அரசுக்கு வழக்கம் போல் அழுத்தம் தர முயலாமல் உண்மையில் அழுத்தம் தர வேண்டும்.

தெனாலி™

செருப்பு வீசினவனுங்க 10 பேர் இல்ல

அவனுங்க மொத்தமே 10 பேருதான் 3 நாளா பிளான் பண்ணி 10 பேரத்தான் சேர்த்துருக்கானுங்க

Faz

உனக்கு உதவியவரை ஒருபோதும் மறக்காதே!

உன்மேல் அன்புகொண்டவரை ஒருபோதும் வெறுக்காதே!

உன்னை நம்பியவரை ஒருபோதும் ஏமாற்றாதே!

niranjan kumar

காந்தியை சுட்டுக்கொன்ற கோட்சே ஒரு தியாகி, அவர் நாட்டு பற்றாளர்: மெகல்காம் குண்டுவெடிப்பின் முக்கிய குற்றவாளியும்,மத்தியபிரதேச பாஜக நாடாளுமன்ற வேட்பாளருமான சாத்வி பிரக்யா புகழாரம்

தேச தந்தையை சுட்டுகொன்றால்,குண்டுவீசி அப்பாவிகளை கொன்றால் தான் இனி இந்த நாட்டில் தேச தியாகிகள்!

Smiley Azam

கஷ்டப்பட்டு கடைசி வரை போராடி தோற்றுப் பார் உன் எதிரிக்குகே உன்னைப் பிடிக்கும்!!!

Stalin SP

நான் பேசியதை ஊடகங்கள் பெரிதாக்கிவிட்டனர். ஊடக நண்பர்கள் ஏன் இப்படி செய்தார்கள் என தெரியவில்லை.- மதுரையில் கமல்

சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து என தாங்கள் பேசியதை ஒவ்வொரு ஊடகத்திற்கும் தனித்தனியாக அனுப்பியது தங்களது அலுவலகம் தான் கமல் சார்.

-லாக் ஆஃப்

.

.

மேலும் படிக்க

.

ஓட்டப்பிடாரம்: வீட்டுக்கு வீடு அதிமுகவின் டெலிவரி அடையாளம்!

.

இந்தியன் 2 ஷங்கரின் அடுத்த பிளான்!

.

போலீசார் மிரட்டல்: பைனான்ஸ் அதிபர் தற்கொலை!

.

டிஜிட்டல் திண்ணை: அள்ளிவீசும் அதிமுக, அமமுக; கிள்ளிக் கொடுக்கும் திமுக

.

அஜித் 60ல் இணையும் இளம் இசையமைப்பாளர்!

.

.

வியாழன், 16 மே 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon