மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, வெள்ளி, 13 டிச 2019

ஆற்றங்கரையில் கிடந்த ஆதார் அட்டைகள்!

ஆற்றங்கரையில் கிடந்த ஆதார் அட்டைகள்!

திருவாரூர் அருகே ஆற்றங்கரையில் கிடந்த சுமார் 3,000க்கும் மேற்பட்ட ஆதார் அட்டைகளைக் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் போலீசார்.

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகேயுள்ளது தேவர் பண்ணை. இன்று (மே 16) காலையில், இங்குள்ள முள்ளியாற்றங்கரை ஓரமாக இரண்டு மூட்டைகள் கிடந்ததைச் சிலர் பார்த்துள்ளனர். அந்த மூட்டைகளைப் பிரித்துக் கொட்டியபோது, அதில் ஏராளமான ஆதார் அட்டைகள் இருப்பது தெரிய வந்தது. சுமார் 3,000க்கும் அதிகமான ஆதார் அட்டைகளைக் கண்டதும் அவர்கள் அதிர்ச்சியடைந்தனர். இது பற்றி அருகிலுள்ள கிராம நிர்வாக அலுவலருக்குத் தகவல் அளித்தனர்.

ஆற்றங்கரையில் கிடந்த ஆதார் அட்டைகளில் அந்த வட்டாரத்தைச் சேர்ந்தவர்களின் விவரங்கள் இடம்பெற்றுள்ளன. தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், இது பற்றி விசாரணை செய்து வருகின்றனர். இந்த ஆதார் அட்டைகள் உண்மையானவையா, போலி அட்டைகளா என்றும், அந்த அட்டைகளைக் கொண்டுவந்து வீசியது யார் என்றும் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

.

.

மேலும் படிக்க

.

ஓட்டப்பிடாரம்: வீட்டுக்கு வீடு அதிமுகவின் டெலிவரி அடையாளம்!

.

இந்தியன் 2 ஷங்கரின் அடுத்த பிளான்!

.

போலீசார் மிரட்டல்: பைனான்ஸ் அதிபர் தற்கொலை!

.

டிஜிட்டல் திண்ணை: அள்ளிவீசும் அதிமுக, அமமுக; கிள்ளிக் கொடுக்கும் திமுக

.

அஜித் 60ல் இணையும் இளம் இசையமைப்பாளர்!

.

.

வியாழன், 16 மே 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon