மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, வெள்ளி, 13 டிச 2019

செனகல் நாட்டுக்கு பேருந்து சப்ளை!

செனகல் நாட்டுக்கு பேருந்து சப்ளை!

சென்னையைச் சேர்ந்த அசோக் லேலண்ட் நிறுவனம் செனகல் நாட்டுக்கு 400 மினி பேருந்துகளைத் தயாரித்து வழங்கும் ஆர்டரைப் பெற்றுள்ளது.

ஹிந்துஜா குழுமத்தைச் சேர்ந்த அசோக் லேலண்ட் நிறுவனம் சென்னையைத் தலைமையிடமாகக் கொண்டு கனரக வாகனங்களைத் தயாரித்து விற்பனை செய்து வருகிறது. பேருந்து தயாரிப்பில் இந்தியாவின் மிகப் பெரிய நிறுவனமாகத் திகழும் அசோக் லேலண்ட், சர்வதேச அளவில் இப்பிரிவில் நான்காம் இடம் வகிக்கிறது. இந்நிறுவனத்துக்கு ஆப்பிரிக்க நாடான செனகலிடமிருந்து புதிய ஆர்டர் ஒன்று கிடைத்துள்ளது. அதன்படி, ரூ.80 கோடி மதிப்பிலான 400 மினி பேருந்துகளைத் தயாரித்து வழங்கவுள்ளது.

செனகல் நாட்டின் தலைநகரமான டகாரை மையமாகக் கொண்டு இயங்கும் சென்பஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்திடமிருந்து இந்த ஆர்டர் அசோக் லேலண்ட் நிறுவனத்துக்குக் கிடைத்துள்ளது. செனகல் நாட்டின் மிகவும் பின்தங்கிய கிராமப்புறங்களை நகர்ப்புறங்களுடன் சாலைப் போக்குவரத்து வழியாக இணைக்கும் பொருட்டு இந்த மினி பேருந்துகள் அங்கு இயக்கப்படவுள்ளதாக அசோக் லேலண்ட் நிறுவனத்தின் சர்வதேசப் பிரிவு துணைத் தலைவரான அர்ஜித் தத்தா சௌத்ரி, டைம்ஸ் ஆஃப் இந்தியா ஊடகத்திடம் தெரிவித்துள்ளார்.

.

.

மேலும் படிக்க

.

ஓட்டப்பிடாரம்: வீட்டுக்கு வீடு அதிமுகவின் டெலிவரி அடையாளம்!

.

இந்தியன் 2 ஷங்கரின் அடுத்த பிளான்!

.

போலீசார் மிரட்டல்: பைனான்ஸ் அதிபர் தற்கொலை!

.

டிஜிட்டல் திண்ணை: அள்ளிவீசும் அதிமுக, அமமுக; கிள்ளிக் கொடுக்கும் திமுக

.

அஜித் 60ல் இணையும் இளம் இசையமைப்பாளர்!

.

.

வியாழன், 16 மே 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon