மின்னம்பலம் மின்னம்பலம்
புதன், 11 டிச 2019

உள்ளாட்சித் தேர்தல்: 2ஆவது அரசாணை வெளியீடு!

உள்ளாட்சித் தேர்தல்: 2ஆவது அரசாணை வெளியீடு!

உள்ளாட்சித் தேர்தலை நடத்துவதற்கான பணிகளில் ஈடுபட்டுள்ள தமிழகத் தேர்தல் ஆணையம் அதுதொடர்பான 2ஆவது அரசாணையை இன்று வெளியிட்டுள்ளது.

உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்காளர் பட்டியலை தயார் செய்வதற்கான வழிமுறைகளை தமிழக தேர்தல் ஆணையம் மே 9ஆம் தேதி வெளியிட்டது. இந்நிலையில் தற்போது வாக்குச்சாவடி அமைப்பது தொடர்பான வழிமுறைகளை வெளியிட்டுள்ளது. இதுதொடர்பாக இன்று (மே 16) வெளியிடப்பட்டுள்ள அரசாணையில் வாக்காளர்களின் எண்ணிக்கையை அடிப்படையாகக் கொண்டு வாக்குச் சாவடிகளை எவ்வாறு அமைப்பது என்பது தொடர்பான விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

அதில், ’டவுன் பஞ்சாயத்து, நகராட்சிகளில் ஒரு வார்டில் 1,200 வாக்காளர்களும், மாநகராட்சிகளில் ஒரு வார்டில் 1400 வாக்காளர்களும் இருந்தால் ஒரு வாக்குச்சாவடி அமைக்க வேண்டும். டவுன் பஞ்சாயத்து, நகராட்சிகளில் ஒரு வார்டில் 1,200 முதல் 2400 வாக்காளர்களும், மாநகராட்சிகளில் ஒரு வார்டில் 1400 முதல் 2800 வாக்காளர்களும் இருந்தால் இரண்டு வாக்குச்சாவடிகள் அமைக்க வேண்டும். மேலும், இந்த வாக்காளர்கள் அனைவரும் ஒரு பகுதிக்குள் வந்தால் ஆண்களுக்கு ஒரு வாக்குச்சாவடியும், பெண்களுக்கு ஒரு வாக்குச்சாவடியும் என தனித்தனியே அமைக்க வேண்டும்’ என்று கூறப்பட்டுள்ளது.

அதேபோல, ‘டவுன் பஞ்சாயத்து, நகராட்சிகளில் ஒரு வார்டில் 2,400 முதல் 2600 வாக்காளர்களும், மாநகராட்சிகளில் ஒரு வார்டில் 2800 முதல் 4200 வாக்காளர்களும் இருந்தால் அந்த வார்டில் 3 வாக்குச்சாவடிகள் அமைக்க வேண்டும். இந்த வார்டில் 2 பகுதிகள் இருந்தால் ஆண்களுக்கு ஒரு வாக்குச்சாவடியும், பெண்களுக்கு ஒரு வாக்குச்சாவடியும், அனைத்து வாக்காளர்களும் சேர்ந்து வாக்களிக்கும் வகையில் ஒரு வாக்குச்சாவடியும் என அமைக்க வேண்டும். 3 பகுதிகள் இருந்தால் அனைத்து வாக்குச்சாவடிகளிலும், அனைவரும் வாக்களிக்கும் வகையில் அமைக்க வேண்டும்’ என்றும் கூறப்பட்டுள்ளது.

இந்த வழிமுறைகளின்படி தயார் செய்யப்பட்ட வாக்குச்சாவடி பட்டியலில் எந்தவொரு வாக்காளரும் விடுபடவில்லை என்று செயல் அலுவலர், நகராட்சி ஆணையர் ஆகியோர் உறுதியளிக்க வேண்டும் என்றும், மாநகராட்சிகளில் தயார் செய்யப்பட்ட பட்டியலில் எந்தவொரு வாக்காளர் பெயரும் விடுபடவில்லை என்று வருவாய் அலுவலர் அல்லது மாநகராட்சி ஆணையர் உறுதியளிக்க வேண்டும் தமிழகத் தேர்தல் ஆணையம் வலியுறுத்தியுள்ளது.

மாவட்ட தேர்தல் அதிகாரி அலுவலகம், டவுன் பஞ்சாயத்து செயல் அலுவலர், 3ஆம் நிலை நகராட்சி, நகராட்சி, மாநகராட்சி ஆணையர் அலுவலகம், தேர்தல் நடத்தும் அலுவலர்களின் அலுவலகம் ஆகிய இடங்களில் வாக்காளர் பட்டியல் மக்கள் பார்வைக்கு வைக்கப்பட வேண்டும் எனவும் அரசாணையில் கூறப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி, பல்வேறு தேவைகளுக்காக ஒவ்வொரு வாக்குச்சாவடியின் பட்டியலையும் 100 நகல்கள் அச்சடித்து வைத்திருக்க வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

.

.

மேலும் படிக்க

.

ஓட்டப்பிடாரம்: வீட்டுக்கு வீடு அதிமுகவின் டெலிவரி அடையாளம்!

.

இந்தியன் 2 ஷங்கரின் அடுத்த பிளான்!

.

டிஜிட்டல் திண்ணை: அள்ளிவீசும் அதிமுக, அமமுக; கிள்ளிக் கொடுக்கும் திமுக

.

அஜித் 60ல் இணையும் இளம் இசையமைப்பாளர்!

.

போலீசார் மிரட்டல்: பைனான்ஸ் அதிபர் தற்கொலை!

.

.

வியாழன், 16 மே 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon