மின்னம்பலம் மின்னம்பலம்
புதன், 11 டிச 2019

தேனிக்கு சென்ற 20 வாக்குப் பதிவு இயந்திரங்கள்!

தேனிக்கு சென்ற  20 வாக்குப் பதிவு இயந்திரங்கள்!

தேனியில் 2 இடங்களில் மட்டுமே மறுவாக்குப்பதிவு நடைபெறவுள்ள சூழலில் 20 வாக்குப் பதிவு இயந்திரங்கள் கொண்டுசெல்லப்பட்டுள்ளது.

தேனி தொகுதிக்குட்பட்ட ஆண்டிப்பட்டி பாலசமுத்திரம் அரசுப் பள்ளி வாக்குச்சாவடி, பெரியகுளம் அருகிலுள்ள வடுகப்பட்டி ஆகிய இரண்டு இடங்களுக்கும் வரும் 19ஆம் தேதி மறுவாக்குப் பதிவு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் நேற்று (மே 15) திருவள்ளூர் மாவட்டத்திலிருந்து 20 வாக்குப் பதிவு இயந்திரங்களும், 30 விவிபாட் இயந்திரங்களும் தேனி வட்டாட்சியர் அலுவலகத்துக்கு கொண்டுசெல்லப்பட்டன. கோவையிலிருந்து சில நாட்களுக்கு முன்பாக தேனிக்கு 50 வாக்குப் பதிவு இயந்திரங்கள் கொண்டுசெல்லப்பட்ட விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில் பன்னீர்செல்வம் மகன் ரவீந்திரநாத்தை வெற்றிபெறவைக்கவே இந்த முயற்சி நடைபெற்றதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின. இந்த சூழலில் 2 இடங்களில் நடைபெறும் வாக்குப் பதிவுக்கு 20 வாக்குப் பதிவு இயந்திரங்கள் கொண்டுசெல்லப்படுவதற்கு திமுக, அமமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

இதுதொடர்பாக செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த தேனி தேர்தல் நடத்தும் அலுவலர் பல்லவி பல்தேவ், “வாக்குப் பதிவு இயந்திரத்தில் கோளாறு ஏற்பட்டு அதன்காரணமாக வாக்குப் பதிவு தடைபட்டுவிடக் கூடாது என்பதில் நாங்கள் தெளிவாக இருக்கிறோம். அதனால் ஒரு வாக்குப் பதிவு இயந்திரம் தேவைப்படும் இடத்தில் 2 யுனிட் வைத்திருக்கிறோம். மேலும் விவிபாட் இயந்திரம் மிகவும் முக்கியமானது. அதனால் 2 வைத்துள்ளோம்” என்று தெரிவித்தார்.

வாக்குப் பெட்டிகளை மாற்ற முயற்சிகள் நடப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டுகின்றனவே என்ற கேள்விக்கு, “அதுபோன்ற சந்தேகங்களுக்கு இடமே இல்லை. இதுதொடர்பாக வேட்பாளர்களின் முகவர்களிடம் தெளிவாக விளக்கியுள்ளோம். அவர்களின் முன்னிலையில்தான் வாக்குப் பதிவு இயந்திரம் சோதனை செய்யப்படுகிறது” என்று பதிலளித்துள்ளார்.

.

.

மேலும் படிக்க

.

ஓட்டப்பிடாரம்: வீட்டுக்கு வீடு அதிமுகவின் டெலிவரி அடையாளம்!

.

இந்தியன் 2 ஷங்கரின் அடுத்த பிளான்!

.

டிஜிட்டல் திண்ணை: அள்ளிவீசும் அதிமுக, அமமுக; கிள்ளிக் கொடுக்கும் திமுக

.

அஜித் 60ல் இணையும் இளம் இசையமைப்பாளர்!

.

போலீசார் மிரட்டல்: பைனான்ஸ் அதிபர் தற்கொலை!

.

.

வியாழன், 16 மே 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon