மின்னம்பலம் மின்னம்பலம்
வெள்ளி, 29 மே 2020

கிச்சன் கீர்த்தனா: ஜில் உணவுகள்!

கிச்சன் கீர்த்தனா: ஜில் உணவுகள்!

சுற்றுலா ஸ்பெஷல்

இந்த சம்மர் சீஸனில் ஜில்லென்ற குளிர்ப் பிரதேசங்களுக்கு டூர் போகிற வாய்ப்பு கிடைத்தவர்கள் பாக்கியவான்கள். நமக்கெல்லாம் அதுக்கு யோகமில்லேப்பா என்று புலம்புகிறவரா நீங்கள்? இந்த உணவுகளைச் சாப்பிட்டு இந்த சம்மரை நீங்களும் ஜில்லுன்னு கொண்டாடலாம். பயணத்தின்போது கிடைக்கும் பொருட்களை வைத்தே நமது உடலின் வெப்பத்தன்மையை, நாம் எடுத்துக்கொள்ளும் உணவின் மூலம் சரி செய்யலாம்.

இளநீர்: இளநீரைப் போன்று சிறந்த எலக்ட்ரோலைட் வேறேதுவுமில்லை. இதில் இருக்கும் குளுக்கோஸ் நமக்கு உடனடி எனர்ஜியை அளிக்கிறது.

லெமன் ஜூஸ்: லெமன் ஜூஸ் எடுத்துக்கொள்வது மிகவும் நல்லது. வெப்பம் தொடர்பான அசௌகரியங்களைப் போக்கி நம் உடலைக் குளிர்வித்து உற்சாகமடையச் செய்கிறது. கூடவே சிறந்த கிருமிநாசினியாகவும் செயல்படுகிறது. ஒருநாளைக்கு இரண்டு கிளாஸ் வரை அருந்தலாம்.

புதினா: சுத்தம் செய்த புதினாவை ஒரு கைப்பிடி அளவு எடுத்து ஒரு டம்ளர் தண்ணீரில் 15 முதல் 20 நிமிடம் கொதிக்கவைத்து குடித்தால், உடல் வெப்பம் நீங்குவதுடன் வாந்தி, மயக்கத்தையும் போக்கும்.

தர்ப்பூசணி: அதிக நீர்த்தன்மைகொண்ட இந்தப் பழம் உடலின் நீர்ச்சத்தை அதிகரித்து, உடலின் நச்சுத்தன்மையைப் போக்குகிறது. ஆன்டிஆக்ஸிடன்ட் சத்துகள் நிறைந்தது. இதை ஜூஸாகவோ சாலடாகவோ சாப்பிடலாம்.

நெல்லி: வைட்டமின் ‘சி’ நிறைந்துள்ள இதன் ஜூஸுடன் நான்கு பங்கு நீர் சேர்த்து, உப்பு அல்லது தேன் சேர்த்து அருந்தலாம். வெறும் வயிற்றில் அருந்துவது இன்னும் சிறப்பு.

நீர்மோர்: தயிரைக் கடைந்து நீர் சேர்த்து, சிறிதளவு லெமன் ஜூஸ் சேர்த்து அருந்தலாம்.

வெள்ளரி, தக்காளி, நுங்கு, பதனீர், ஆரஞ்சு, திராட்சைப் பழங்கள் போன்றவையும் வெப்பத்தைத் தடுக்கவல்லன.

நீர்க் காய்கறிகளான பூசணி, பீர்க்கன், சுரைக்காய், முள்ளங்கி, கேரட் ஆகியவற்றில் தயிர்ப் பச்சடி தயாரித்துச் சாப்பிடலாம்.

நேற்றைய ரெசிப்பி: டூ இன் ஒன் வேர்க்கடலைப் பொடி

.

.

மேலும் படிக்க

.

டிஜிட்டல் திண்ணை: அள்ளிவீசும் அதிமுக, அமமுக; கிள்ளிக் கொடுக்கும் திமுக

.

அஜித் 60ல் இணையும் இளம் இசையமைப்பாளர்!

.

இந்தியன் 2 ஷங்கரின் அடுத்த பிளான்!

.

போலீசார் மிரட்டல்: பைனான்ஸ் அதிபர் தற்கொலை!

.

என்.ஜி.கே. ரிலீஸ்: சூர்யாவின் புதிய சாதனை!

.

.

வியாழன், 16 மே 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon