மின்னம்பலம் மின்னம்பலம்
வியாழன், 5 டிச 2019

பக்ரீத் பாடல்கள் நாளை ரிலீஸ்!

பக்ரீத் பாடல்கள் நாளை ரிலீஸ்!

நடிகர் விக்ராந்த் கதாநாயகனாக நடித்துள்ள பக்ரீத் படத்தின் டீசர் அண்மையில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது இப்படத்தின் பாடல்கள் நாளை வெளியாகவுள்ளதாக படக்குழு தரப்பில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இவ்விவரத்தை விக்ராந்த் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

தமிழ் சினிமாவில் கற்க கசடற படம் மூலம் கதாநாயகனாக அறிமுகமானவர் விக்ராந்த். அதன் பிறகு அவர் பல படங்களில் நடித்திருந்தாலும் கதாநாயகனாக நடிக்கும் வாய்ப்புகள் அமையவில்லை. வில்லன் மற்றும் குணச்சித்திர கதாபாத்திரங்களில் மட்டுமே அவர் நடித்து வந்தார். கடைசியாக அவர் நடித்த நெஞ்சில் துணிவிருந்தால் திரைப்படத்தை சுசிந்திரன் இயக்கியிருந்தார். அப்படத்திற்கும் போதிய வரவேற்பு கிடைக்கவில்லை.

நீண்ட இடைவேளைக்கு பிறகு தற்போது அவர் கதாநாயகனாக நடித்திருக்கும் படம் தான் பக்ரீத். இப்படத்தை இயக்குநர் ஜெகதீசன் சுபு இயக்கியுள்ளார். இவர் ஏற்கெனவே சிகை படத்தை இயக்கியிருந்தார். இவர் காக்கா முட்டை இயக்குநர் மணிகண்டனிடம் இணை இயக்குநராக பணிபுரிந்தவர்.

இதைத்தொடர்ந்து பட்சி படத்தை இயக்கவுள்ளார். சிகை இயக்குநரின் அடுத்த படைப்பு என்பதாலும் , நீண்ட இடைவேளைக்குப் பின் விக்ராந்த் கதாநாயகனாக நடிக்கும் படம் என்பதாலும் இப்படத்திற்க்கு எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.

.

.

மேலும் படிக்க

.

ஓட்டப்பிடாரம்: வீட்டுக்கு வீடு அதிமுகவின் டெலிவரி அடையாளம்!

.

இந்தியன் 2 ஷங்கரின் அடுத்த பிளான்!

.

டிஜிட்டல் திண்ணை: அள்ளிவீசும் அதிமுக, அமமுக; கிள்ளிக் கொடுக்கும் திமுக

.

அஜித் 60ல் இணையும் இளம் இசையமைப்பாளர்!

.

போலீசார் மிரட்டல்: பைனான்ஸ் அதிபர் தற்கொலை!

.

.

வியாழன், 16 மே 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon