மின்னம்பலம் மின்னம்பலம்
புதன், 11 டிச 2019

விற்பனையை உயர்த்த விலைக் குறைப்பு!

விற்பனையை உயர்த்த விலைக் குறைப்பு!

இந்தியாவில் ஸ்மார்ட்போன் விற்பனையை உயர்த்தும் முயற்சியில் நிறுவனங்கள் போட்டி போட்டுக் கொண்டு விலை குறைந்த ஸ்மார்ட்போன்களைத் தொடர்ந்து அறிமுகப்படுத்தி வருகின்றன.

இந்திய மக்களிடையே ஸ்மார்ட்போன்கள் மீதான மோகம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பல்வேறு சிறப்பு வசதிகள் மற்றும் குறைவான மொபைல் டேட்டா கட்டணம் போன்றவற்றால் ஸ்மார்ட்போன்களை வாங்குவது இந்தியர்களுக்கு எளிதாகவும் ஏதுவாகவும் இருக்கிறது. அதோடு, புதிய ஸ்மார்ட்போன்களும் குறைந்த விலையில் தரம் உயர்த்தப்பட்டு அறிமுகப்படுத்துவது தற்போதைய வாடிக்கையாகிவிட்டது. நிறுவனங்கள் போட்டி போட்டுக் கொண்டு குறைந்த விலையில் பல்வேறு சிறப்பு அம்சங்களுடன் புதிய ஸ்மார்ட்போன்களை சந்தையில் தொடர்ந்து அறிமுகப்படுத்தி வருகின்றன.

ஒன் பிளஸ் நிறுவனம் சமீபத்தில் ரூ.32,999 விலையில் ஒன் பிளஸ் 7 மாடலை அறிமுகம் செய்தது. இதன் விலை இதற்கு முந்தைய ஒன் பிளஸ் 6 மாடலை விட 6 சதவிகிதம் குறைவாகும். புதிய ஸ்மார்ட்போன்கள் தரம் உயர்த்தப்பட்டு அறிமுகப்படுத்தப்படும்போது அவற்றின் விலை சராசரியாக 12.6 சதவிகிதம் கூடுதலாக இருக்கும் எனவும், ஆனால் தற்போது விலைக் குறைப்பு மேற்கொள்ளப்பட்டு அறிமுகப்படுத்தப்படுவதாகவும் ஸ்மார்ட்போன் துறையினர் டைம்ஸ் ஆஃப் இந்தியா ஊடகத்தின் கருத்துக் கேட்பில் தெரிவித்துள்ளனர்.

சென்ற வாரத்தில் கூட விவோ நிறுவனம் வி15 புரோ மாடலை அதற்கு முந்தைய மாடலை விட ரூ.2000 விலை குறைவாக அறிமுகம் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

.

.

மேலும் படிக்க

.

ஓட்டப்பிடாரம்: வீட்டுக்கு வீடு அதிமுகவின் டெலிவரி அடையாளம்!

.

இந்தியன் 2 ஷங்கரின் அடுத்த பிளான்!

.

டிஜிட்டல் திண்ணை: அள்ளிவீசும் அதிமுக, அமமுக; கிள்ளிக் கொடுக்கும் திமுக

.

அஜித் 60ல் இணையும் இளம் இசையமைப்பாளர்!

.

போலீசார் மிரட்டல்: பைனான்ஸ் அதிபர் தற்கொலை!

.

.

வியாழன், 16 மே 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon