மின்னம்பலம் மின்னம்பலம்
வியாழன், 5 டிச 2019

கமல் பரப்புரைக்கு எதிரான மனு தள்ளுபடி!

கமல் பரப்புரைக்கு எதிரான மனு தள்ளுபடி!

மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசனின் பரப்புரைக்கு தடை விதிக்க வேண்டும் என்ற மனுவை சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை தள்ளுபடி செய்துள்ளது.

மே 12ஆம் தேதி அரவக்குறிச்சி பள்ளப்பட்டியில் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த கமல்ஹாசன், காந்தியைக் கொன்ற கோட்சே ஒரு இந்துத் தீவிரவாதி என்று கூறியதற்கு பாஜக மற்றும் இந்து அமைப்புகளிடையே கடுமையான எதிர்ப்புக் கிளம்பியுள்ளது. அதிமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான நமது அம்மாவிலும் கமலுக்கு கண்டனம் வெளியானது. இதுவரையில் 40க்கும் மேற்பட்ட இடங்களில் கமல் மீது புகார் கொடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கமல்ஹாசனின் பரப்புரைக்கு தடை விதிக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் வழக்கறிஞர் சரவணன் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கை அவசர வழக்காக எடுத்துக்கொள்ள வேண்டுமெனவும் அவர் கோரிக்கை வைத்தார். இந்த மனு இன்று (மே 16) நீதிபதிகள் நிஷா பாணு மற்றும் தண்டபாணி அமர்வில் விசாரணைக்கு வந்தது. பொது அமைதிக்கு தீங்கு ஏற்படுத்தும் வகையில் கமல் பிரச்சாரத்தில் பேசி வருகிறார், எனவே அவரது பிரச்சாரத்துக்கு தடை விதிக்க வேண்டும் என மனுதாரர் கோரிக்கை வைத்தார். தேர்தல் முடியும் வரை தேர்தல் தொடர்பான அனைத்து விவகாரங்களையும் தேர்தல் ஆணையத்தில்தான் முறையிட வேண்டும் என்று கூறி நீதிபதிகள் வழக்கை தள்ளுபடி செய்துவிட்டனர்.

டெல்லி உயர் நீதிமன்றத்தில் பாஜக வழக்கறிஞர் உபாத்யாயா இதுதொடர்பாக தொடர்ந்த வழக்கை ஏற்கெனவே டெல்லி உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. இதைக்குறிப்பிட்ட நீதிபதிகள், “தேர்தல் விவகாரங்கள் தொடர்பாக பல்வேறு வழிகாட்டுதல்களையும் நீதிமன்றம் பிறப்பித்துள்ளது. கமல் பரப்புரைக்கு தடை விதிக்கும் அதிகாரம் தேர்தல் ஆணையத்துக்கு மட்டுமே உள்ளது. அங்கு புகார் கூறி மனுதாரர் நிவாரணம் பெறலாம். இதில் நீதிமன்றம் தலையிட இயலாது. அவசர வழக்காகவும் இதை எடுத்துக்கொள்ள இயலாது” என்று தெரிவித்துள்ளனர்.

மேலும், இவ்விவகாரத்தில் முன் ஜாமீன் கோரி நேற்று சென்னை உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் கமல்ஹாசன் தரப்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டிருந்த நிலையில், இன்று இந்த மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

.

.

மேலும் படிக்க

.

ஓட்டப்பிடாரம்: வீட்டுக்கு வீடு அதிமுகவின் டெலிவரி அடையாளம்!

.

இந்தியன் 2 ஷங்கரின் அடுத்த பிளான்!

.

டிஜிட்டல் திண்ணை: அள்ளிவீசும் அதிமுக, அமமுக; கிள்ளிக் கொடுக்கும் திமுக

.

அஜித் 60ல் இணையும் இளம் இசையமைப்பாளர்!

.

போலீசார் மிரட்டல்: பைனான்ஸ் அதிபர் தற்கொலை!

.

.

வியாழன், 16 மே 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon