மின்னம்பலம் மின்னம்பலம்
புதன், 11 டிச 2019

அமிதாப் பச்சனுடன் பிரச்சினை: எஸ்.ஜே.சூர்யா விளக்கம்!

அமிதாப் பச்சனுடன் பிரச்சினை: எஸ்.ஜே.சூர்யா விளக்கம்!

பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் நடிப்பில் அண்மையில் வெளியான பட்லா திரைப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. இதைத்தொடர்ந்து ‘உயர்ந்த மனிதன்’ படம் மூலம் தமிழில் அறிமுகமாகிறார் அமிதாப் பச்சன்.

இப்படத்தில் எஸ்.ஜே.சூர்யா, ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். கள்வனின் காதலி திரைப்படத்தை இயக்கிய தமிழ்வாணன் இப்படத்தை இயக்கி வருகிறார். ஏப்ரல் மாதத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு பணிகளில் ஏப்ரல் மாதத்தில் சில நாட்களுக்கு அமிதாப் பச்சன் கலந்துகொண்டார்.

இந்த நிலையில், இப்படத்தின் பணிகள் நிறுத்திவைக்கப்பட்டுள்ளதாகவும், தயாரிப்பாளர் சுரேஷ் கண்ணனுக்கும், அமிதாப் பச்சனுக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டதாகவும் கடந்த சில நாட்களாக செய்திகள் வெளிவந்தன. இதனால் படப்பிடிப்பு தள்ளிவைக்கப்பட்டுள்ளதாகவும் சில செய்திகள் வெளியாகின. இந்நிலையில் படத்தின் தற்போதைய நிலை குறித்து எஸ்.ஜே.சூர்யா விளக்கமளித்துள்ளார்.

இதுகுறித்து அவர் ட்விட்டரில் வெளியிட்டுள்ள சிறு அறிவிப்பில், “தயாரிப்பு நிறுவனத்திற்கும் அமிதாப் பச்சனுக்கும் இடையே சிறு பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இப்பிரச்சினையை நான் தீர்த்து வைத்து இதர பணிகளை முன்னெடுத்து செல்வேன். எனது மான்ஸ்டர் படம் வெளியான பிறகு நான் மும்பைக்கு சென்று இப்பிரச்சினைகளை தீர்க்கவுள்ளேன்.

படம் தொடர்பான பல பிரச்சினைகளை நானும், இயக்குநர் தமிழ்வாணனும் ஏற்கெனவே தீர்த்துவிட்டோம். எதிர்மறையான கருத்துகளை தவிர்த்துவிடுங்கள்” என்று தெரிவித்துள்ளார். எஸ்.ஜே. சூர்யா நடித்துள்ள மான்ஸ்டர் திரைப்படம் நாளை (மே 17) திரைக்கு வரவிருக்கிறது. இப்படத்தில் பிரியா பவானி சங்கர், கருணாகரன் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இப்படத்தை நெல்சன் வெங்கட் இயக்கியுள்ளார்.

.

.

மேலும் படிக்க

.

ஓட்டப்பிடாரம்: வீட்டுக்கு வீடு அதிமுகவின் டெலிவரி அடையாளம்!

.

இந்தியன் 2 ஷங்கரின் அடுத்த பிளான்!

.

டிஜிட்டல் திண்ணை: அள்ளிவீசும் அதிமுக, அமமுக; கிள்ளிக் கொடுக்கும் திமுக

.

அஜித் 60ல் இணையும் இளம் இசையமைப்பாளர்!

.

போலீசார் மிரட்டல்: பைனான்ஸ் அதிபர் தற்கொலை!

.

.

வியாழன், 16 மே 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon