மின்னம்பலம் மின்னம்பலம்
செவ்வாய், 17 செப் 2019

மருத்துவச்சேர்க்கை: விண்ணப்பம் விநியோகம்!

மருத்துவச்சேர்க்கை: விண்ணப்பம் விநியோகம்!

வரும் ஜூன் 6ஆம் தேதி முதல் மருத்துவப் படிப்புகளுக்கான விண்ணப்பம் விநியோகிக்கப்பட வாய்ப்புள்ளதாகத் தெரிவித்துள்ளது மருத்துவக் கல்வி இயக்ககம்.

கடந்த மே 5ஆம் தேதியன்று ஒடிசா நீங்கலாக நாடு முழுவதும் நீட் நுழைவுத் தேர்வு நடந்தது. நீட் நுழைவுத் தேர்வு முடிவுகள் வரும் ஜூன் 5ஆம் தேதியன்று வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த அறிவிப்பு வெளியானவுடன், தமிழகத்தில் மருத்துவச் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் விநியோகம் ஆரம்பமாகும்.

தமிழகத்தைப் பொறுத்தவரை, புதிதாகத் தொடங்கப்படவுள்ள கரூர் மருத்துவக் கல்லூரி உட்பட மொத்தமுள்ள 23 கல்லூரிகளில் இந்த ஆண்டு 3,150 எம்பிபிஎஸ் இடங்கள் நிரப்பப்படவுள்ளன. இதற்கான விண்ணப்பங்கள் ஜூன் 6 முதல் விநியோகிக்கப்பட வாய்ப்புள்ளதாகத் தெரிவித்துள்ளது மருத்துவக் கல்வி இயக்ககம். இது தொடர்பான அரசாணை விரைவில் வெளியாகும் என்று கூறப்படுகிறது.

மதுரை அரசு மருத்துவக் கல்லூரியில் கூடுதலாக 95 எம்பிபிஎஸ் இடங்கள் சேர்க்க அனுமதி கேட்கப்பட்டுள்ளது. இதுவும் கிடைக்க வாய்ப்பிருப்பதாகச் சொல்லப்படுகிறது.

.

.

மேலும் படிக்க

.

ஓட்டப்பிடாரம்: வீட்டுக்கு வீடு அதிமுகவின் டெலிவரி அடையாளம்!

.

இந்தியன் 2 ஷங்கரின் அடுத்த பிளான்!

.

டிஜிட்டல் திண்ணை: அள்ளிவீசும் அதிமுக, அமமுக; கிள்ளிக் கொடுக்கும் திமுக

.

அஜித் 60ல் இணையும் இளம் இசையமைப்பாளர்!

.

போலீசார் மிரட்டல்: பைனான்ஸ் அதிபர் தற்கொலை!

.

.

வியாழன், 16 மே 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon