மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, வெள்ளி, 7 ஆக 2020

தேர்தல் டிஜிபியை மதிக்காத தேர்தல் ஆணையம்!

தேர்தல் டிஜிபியை மதிக்காத தேர்தல் ஆணையம்!

நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலுக்காகவும், 22 சட்டமன்ற இடைத்தேர்தலுக்காகவும் வழக்கமாக மேற்கொள்ளப்படும் காவல்துறை அதிகாரிகள், கலெக்டர்கள் மாற்றத்தை இம்முறை தேர்தல் ஆணையம் செய்யவே இல்லை. ஆனால் எதிர்க்கட்சிகளின் வற்புறுத்தலுக்கு இணங்க டிஜிபி ராஜேந்திரனுக்கு பதிலாக தேர்தல் டிஜிபியாக அசுதோஷ் சுக்லாவை தேர்தலுக்கு ஒரு வாரம் முன்னதாக ஏப்ரல் 10 ஆம் தேதி நியமித்தது அகில இந்திய தேர்தல் ஆணையம்.

தேர்தல் டிஜிபியாக சுக்லா நியமிக்கப்பட்டாலும் அவரது ஆலோசனைகள், பரிந்துரைகள் எதையும் தேர்தல் ஆணையம் கண்டுகொள்ளவில்லை என்று தகவல்கள் வெளிவந்தன. குறிப்பாக சில காவல்துறை அதிகாரிகளை இடம் மாற்றச் சொல்லி சுக்லா அளித்த பரிந்துரைகளை தேர்தல் ஆணையம் ஏற்கவில்லை என்று ஐபிஎஸ் அதிகாரிகள் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டது. ஊடகங்களிலும் இதுகுறித்த செய்திகள் பரவிய நிலையில் கடந்த மே 2 ஆம் தேதி சூலூர் இடைத்தேர்தல் பாதுகாப்புப் பணிகளை ஆய்வு செய்யச் சென்ற தேர்தல் டிஜிபி சுக்லாவிடம் இதுகுறித்து செய்தியாளர்கள் கேட்டனர்.

அதற்கு பதிலளித்த சுக்லா, “இந்த விஷயம் பற்றி ஊடகங்களிடம் பேசுவது முறையாக இருக்காது” என்று கூறிவிட்டார்.

தமிழக தலைமை தேர்தல் ஆணையர் சத்யபிரதா சாகுவிடம் இதே கேள்வி கேட்கப்பட்டபோதும்“தேர்தல் டிஜிபியின் பரிந்துரைகள் பற்றி தலைமைத் தேர்தல் ஆணையம்தான் இறுதிமுடிவெடுக்க வேண்டும்” என்று நழுவினார்.

இந்தப் பின்னணியில், மத்திய- மாநில ஆட்சியாளர்கள் மீது தமிழக ஐ.பி.எஸ். மற்றும் ஐ.ஏ.எஸ்.. அதிகாரிகள் கடுமையான அதிருப்தியில் இருப்பதாகச் சொல்கிறார்கள் கோட்டை வட்டார அதிகாரிகள்.

“அசுதோஷ் சுக்லா தேர்தல் டிஜிபியாக பொறுப்பேற்றபிறகு, தமிழக தேர்தல் அதிகாரிக்கு சில காவல்துறை அதிகாரிகளை மாற்றவேண்டும், அப்போதுதான் தேர்தல் சிறப்பாக நடைபெறும் என்று அதிகாரிகள் பெயர்கள் குறிப்பிட்டு எழுதியிருந்தார். டிஜிபி தேர்தல் ஆணையத்திற்கு எழுதிய கடிதத்தின் முழு விபரம் தமிழக ஆட்சியாளர்களுக்கும், பாஜக முக்கிய பிரமுகர்களுக்கும் கசிந்துள்ளது. இதுபற்றி டிஜிபியிடமே சில அதிகாரிகள் மறைமுகமாகக் கேட்டுள்ளார்கள்.

அவரும் அதை பெரிதுபடுத்தாமல் விஷயத்தை உணர்ந்து, மீண்டும் தேர்தல் அதிகாரிக்கு நினைவூட்டல் கடிதம் எழுதியுள்ளார். அப்படியும் நடவடிக்கை இல்லை. எனவே இரண்டாவது முறையாகவும் நினைவூட்டல் கடிதம் எழுதியுள்ளார். மொத்தம் மூன்று கடிதம் அனுப்பியும் ஒரு கடிதத்திற்குக் கூட தேர்தல் ஆணையத்திடமிருந்து பதில் இல்லை .

டிஜிபி சுக்லா தனது நெருக்கமான நண்பர்களுடன் மனம் விட்டுப் பேசியுள்ளார், ’தேர்தல் ஆணையமும் ரூலிங் பார்ட்டியும் பின்னிப் பிணைந்துபோய் ஒற்றுமையாக உள்ளது, இப்படி இருந்தால் எப்படித் தேர்தல் நேர்மையாக நடக்கும்?’ என்று ஆதங்கப்பட்டுள்ளார் தேர்தல் டிஜிபி” என்று கூறுகிறார்கள் கோட்டை வட்டார அதிகாரிகள்.

.

.

மேலும் படிக்க

.

ஓட்டப்பிடாரம்: வீட்டுக்கு வீடு அதிமுகவின் டெலிவரி அடையாளம்!

.

இந்தியன் 2 ஷங்கரின் அடுத்த பிளான்!

.

டிஜிட்டல் திண்ணை: அள்ளிவீசும் அதிமுக, அமமுக; கிள்ளிக் கொடுக்கும் திமுக

.

அஜித் 60ல் இணையும் இளம் இசையமைப்பாளர்!

.

போலீசார் மிரட்டல்: பைனான்ஸ் அதிபர் தற்கொலை!

.

.

வியாழன், 16 மே 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon