மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, வியாழன், 16 ஜூலை 2020

குண்டுவெடிப்பு: இலங்கை செல்லும் சீன குழு!

குண்டுவெடிப்பு: இலங்கை செல்லும் சீன குழு!

ஏப்ரல் 21ஆம் தேதி ஈஸ்டர் ஞாயிறு குண்டுவெடிப்பு தாக்குதலையடுத்து இலங்கையில் ஏற்பட்ட பதற்றமான சூழல் இன்னும் தணியாத நிலையில், இந்தத் தாக்குதலுக்கு பின் முதல் வெளிநாட்டு பயணமாக இலங்கை அதிபர் சிறிசேனா சீனாவுக்கு சென்று வந்துள்ளார். சிறிசேனாவின் சீன பயணத்தின் மூலம் இலங்கைக்குள் சீனாவின் கை மீண்டும் ஓங்கியிருப்பதாக சர்வதேச நோக்கர்கள் கருதுகிறார்கள்.

கடந்த 13ஆம் தேதி சீனா சென்றடைந்தார் இலங்கை அதிபர். அங்கு சீன அதிபர், சீனப் பிரதமர் ஆகியோருடன் சந்திப்புகளை நடத்தியுள்ளார். மேலும் ஆசிய கலாச்சாரங்கள் பற்றிய மாநாட்டிலும் கலந்து கொண்டு உரையாற்றினார் சிறிசேனா.

இந்தப் பயணத்தின் முக்கிய அங்கமாக சீன அதிபர் சி ஜின்பிங் - சிறிசேனா சந்திப்பு நடைபெற்றது. அப்போது பயங்கரவாதத் தாக்குதலை எதிர்கொள்ள இலங்கைக்கு தேவையான அனைத்து உதவிகளையும் சீனா செய்து தரும் என்று இலங்கை அதிபர் உறுதியளித்துள்ளார். மேலும் இலங்கை பாதுகாப்புத் துறை மேம்பாட்டுக்காக சிறிசேனாவின் கோரிக்கைக்கிணங்க 260 கோடி ரூபாய் நிதி உதவியையும் இலங்கைக்கு சீனா வழங்கியுள்ளது. அதோடு இலங்கையிலுள்ள 100 போலீஸ் நிலையம் ஒவ்வொன்றுக்கும் நவீன ரக ஜீப்புகளை இலங்கை வழங்கியிருக்கிறது. . ஏற்கனவே எட்டாம் தேதி முதல் கட்டமாக எட்டு நவீன ஜீப்புகளை இலங்கைக்கான சீனத் தூதர் இலங்கை அதிபரிடம் வழங்கியிருந்தார்.

இந்த பயணத்தின்போது, “சமூக வலைத்தளங்களின் ஊடாக போலிப் பிரசாரங்களை பரப்பி மறைந்திருந்து பயங்கரவாதத்தை விதைக்கும் நபர்களையும் குற்றவாளிகளையும் கண்டறிவதற்கும் அந்த அக்குற்றங்களை தடுப்பதற்கு தேவையான தொழிநுட்ப உபகரணங்களும் அறிவும் இலங்கையிடம் இல்லை” என தெரிவித்தார் இலங்கை அதிபர்.

இதையடுத்து சமூக வலை தளங்களை கண்காணிக்கும் நவீன உபகரணங்களையும் தொழிநுட்பத்தையும் இலங்கைக்கு வழங்குவதற்கு சீனா சம்மத்தித்துள்ளது. இது தொடர்பாக சீன தொழிநுட்ப குழுவொன்றை இலங்கைக்கு அனுப்புவதற்கு நடவடிக்கை எடுப்பதாகவும் தெரிவித்தார் சீன அதிபர். சீன நிதியுதவியின் கீழ் இலங்கையின் பொலன்னறுவையில் கட்டப்பட்டு வரும் சிறுநீரக மருத்துவமனை பற்றியும் கலந்துரையாடப்பட்டது. இந்த சந்திப்பின்போது இலங்கையை சீனாவின் சிறந்த நண்பன் என்று பாராட்டியிருக்கிறார் சீன அதிபர்.

இலங்கை அதிபரின் சீன பயணம் அது தொடர்பான முன்னெடுப்புகள் தொடர்பாக இந்தியா கவனித்து வருவதாக தெரிகிறது.

.

.

மேலும் படிக்க

.

ஓட்டப்பிடாரம்: வீட்டுக்கு வீடு அதிமுகவின் டெலிவரி அடையாளம்!

.

இந்தியன் 2 ஷங்கரின் அடுத்த பிளான்!

.

டிஜிட்டல் திண்ணை: அள்ளிவீசும் அதிமுக, அமமுக; கிள்ளிக் கொடுக்கும் திமுக

.

அஜித் 60ல் இணையும் இளம் இசையமைப்பாளர்!

.

போலீசார் மிரட்டல்: பைனான்ஸ் அதிபர் தற்கொலை!

.

.

வியாழன், 16 மே 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon