மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, திங்கள், 10 ஆக 2020

திருவண்ணாமலை: காணாமல்போன மரகதலிங்கம் மீட்பு!

திருவண்ணாமலை: காணாமல்போன மரகதலிங்கம் மீட்பு!

இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் திருவண்ணாமலை அருகேயுள்ள கோயிலொன்றில் காணாமல்போன மரகதலிங்கம் வேட்டவலம் ஜமீன் பங்களா அருகே கண்டெடுக்கப்பட்டுள்ளது.

திருவண்ணாமலை மாவட்டம் வேட்டவலம் ஜமீன் கோட்டை வளாகத்தில் உள்ளது மனோன்மணியம்மன் கோயில். இங்கு அரை அடி உயர மரகதலிங்கம் இருந்தது. பல கோடி ரூபாய் மதிப்புள்ள இந்த மரகதலிங்கம், 2017ஆம் ஆண்டு ஜனவரி 8ஆம் தேதியன்று காணாமல்போனது. அன்றைய தினம் கோயிலில் பூஜைகள் செய்துவரும் சண்முக சிவாச்சாரியார் இதனால் அதிர்ச்சியடைந்தார். அது மட்டுமல்லாமல், அக்கோயிலில் இருந்த தங்கத் தாலி, வெள்ளி ஒட்டியாணம், கிரீடம் ஆகியன திருடு போயிருந்தன. கருவறையில் துளையிட்டு மரகதலிங்கம் கொள்ளையடிக்கப்பட்டது வேட்டவலம் போலீசாரின் விசாரணையில் தெரிய வந்தது. இந்த வழக்கு சிறப்பு அதிகாரி பொன் மாணிக்கவேல் தலைமையிலான சிலைக்கடத்தல் தடுப்புப் பிரிவுக்கு மாற்றப்பட்டது. இதன் தொடர்ச்சியாக, வேட்டவலம் ஜமீன் பகுதியில் இருப்பவர்கள் போலீசாரின் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டனர்.

வேட்டவலம் ஜமீன் ஊழியர் பச்சையப்பன் என்பவர் கொடுத்த தகவலின் அடிப்படையில், ஜமீன் பங்களா வளாகத்திலுள்ள தண்ணீர் தொட்டியில் தற்போது மரகதலிங்கம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அதனை மீட்டனர் போலீசார். மரகதலிங்கம் அங்கு கொண்டுவரப்பட்டது குறித்து, தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

.

.

மேலும் படிக்க

.

ஓட்டப்பிடாரம்: வீட்டுக்கு வீடு அதிமுகவின் டெலிவரி அடையாளம்!

.

இந்தியன் 2 ஷங்கரின் அடுத்த பிளான்!

.

டிஜிட்டல் திண்ணை: அள்ளிவீசும் அதிமுக, அமமுக; கிள்ளிக் கொடுக்கும் திமுக

.

அஜித் 60ல் இணையும் இளம் இசையமைப்பாளர்!

.

போலீசார் மிரட்டல்: பைனான்ஸ் அதிபர் தற்கொலை!

.

.

வியாழன், 16 மே 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon