மின்னம்பலம் மின்னம்பலம்
ஞாயிறு, 31 மே 2020

புல்வாமா: ராணுவ வீரர் வீரமரணம்!

புல்வாமா: ராணுவ வீரர் வீரமரணம்!

புல்வாமாவில் இன்று அதிகாலை பாதுகாப்புப் படையினருக்கும், பயங்கரவாதிகளுக்கும் இடையே நடந்த துப்பாக்கிச்சூடு தாக்குதலில் 2 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர். ஒரு ராணுவ வீரர் வீரமரணம் அடைந்துள்ளார்.

கடந்த பிப்ரவரி மாதம் புல்வாமாவில் துணை நிலை ராணுவ வீரர்கள் சென்ற வாகனத்தில் ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத அமைப்பு நடத்திய தாக்குதலில் 40 வீரர்கள் கொல்லப்பட்டனர். இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் ஜெய்ஸ் இ முகமது தீவிரவாத அமைப்பு மீது இந்திய விமானப்படை தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலைத் தொடர்ந்து எல்லையில் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது. கடந்த மே 6ஆம் தேதி புல்வாமாவில் மக்களவைத் தேர்தலின் போது குண்டுவீசி தாக்குதல் நடத்தப்பட்டது.

இந்நிலையில் இன்றும் புல்வாமாவில் தாக்குதல் நடைபெற்றுள்ளது. ஜம்மு காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தின் தலிபோரா பகுதியில் ஒரு வீட்டில் பயங்கரவாதிகள் தங்கியிருப்பதாகப் பாதுகாப்புப் படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இன்று அதிகாலை அந்த வீட்டை பாதுகாப்புப் படையினர் சுற்றி வளைத்துள்ளனர். அப்போது பாதுகாப்பு படையினருக்கும், பயங்கரவாதிகளுக்கும் இடையே கடுமையான துப்பாக்கிச்சூடு தாக்குதல் நடைபெற்றுள்ளது. இந்த துப்பாக்கிச்சூட்டில் 2 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர். ஒரு ராணுவ வீரர் வீரமரணம் அடைந்துள்ளார். மேலும் பொதுமக்களில் ஒருவரும் காயமடைந்திருக்கிறார். இந்த தாக்குதலின் போது பயங்கரவாதிகள் வைத்திருந்த சில ஆயுதங்களும் கைப்பற்றப்பட்டிருக்கின்றன.

இந்த சம்பவத்தை தொடர்ந்து தலிபோராவில் இணையதள சேவை முடக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கூடுதல் பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் படிக்க

.

ஓட்டப்பிடாரம்: வீட்டுக்கு வீடு அதிமுகவின் டெலிவரி அடையாளம்!

.

இந்தியன் 2 ஷங்கரின் அடுத்த பிளான்!

.

டிஜிட்டல் திண்ணை: அள்ளிவீசும் அதிமுக, அமமுக; கிள்ளிக் கொடுக்கும் திமுக

.

அஜித் 60ல் இணையும் இளம் இசையமைப்பாளர்!

.

போலீசார் மிரட்டல்: பைனான்ஸ் அதிபர் தற்கொலை!

.

.

வியாழன், 16 மே 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon