மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, செவ்வாய், 25 பிப் 2020

இங்கிலாந்து கேப்டன் விளையாடத் தடை: ஐசிசி!

இங்கிலாந்து கேப்டன் விளையாடத் தடை: ஐசிசி!

இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் அணி ஐந்து ஒரு நாள் போட்டிகள் அடங்கிய தொடரில் விளையாடி வருகிறது. பாகிஸ்தானுக்கு எதிரான மூன்றாவது ஒரு நாள் போட்டியில் இங்கிலாந்து அணி ஆறு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. இப்போட்டியில், முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி ஒன்பது விக்கெட் இழப்பிற்கு 358 ரன்களை எடுத்தது. பாகிஸ்தான் அணியின் தொடக்க வீரர் இமாம் உல் ஹக் 151 ரன்களை குவித்தார்.

359 என்ற மிகப்பெரும் இலக்குடன் இரண்டாவதாக களமிறங்கிய இங்கிலாந்து அணி தொடக்கம் முதலாகவே நேர்த்தியாக விளையாடி 44.5 ஓவர்களில் ஆறு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியடைந்தது. இங்கிலாந்து அணியின் வீரர் பேரிஸ்டவ் அதிரடியாக விளையாடி 128 ரன்களை குவித்து வெற்றிக்கு வழிவகை செய்தார். இந்த போட்டியில் வெற்றிபெற்றதால் 2-0 என்ற கணக்கில் இங்கிலாந்து அணி முன்னிலையில் உள்ளது.

இந்நிலையில், இங்கிலாந்து அணியின் கேப்டன் மோர்கன் பந்துவீச அதிக நேரம் எடுத்துக்கொண்டதாக குற்றம்சாட்டி அவர் ஒரு போட்டியில் விளையாட ஐசிசி தடை விதித்துள்ளது. கடந்த 12 மாதங்களில் இரண்டாவது முறையாக அவருக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் அவரது சம்பளத்தில் 40 விழுக்காட்டை அபராதமாக விதித்துள்ளது ஐசிசி. அணியின் மற்ற வீரர்களுக்கு சம்பளத்தில் 20 விழுக்காடு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. உலகக்கோப்பை போட்டியிலும் இங்கிலாந்து அணிக்கு மோர்கன் தலைமை வகிப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.

.

.

மேலும் படிக்க

.

ஓட்டப்பிடாரம்: வீட்டுக்கு வீடு அதிமுகவின் டெலிவரி அடையாளம்!

.

இந்தியன் 2 ஷங்கரின் அடுத்த பிளான்!

.

டிஜிட்டல் திண்ணை: அள்ளிவீசும் அதிமுக, அமமுக; கிள்ளிக் கொடுக்கும் திமுக

.

அஜித் 60ல் இணையும் இளம் இசையமைப்பாளர்!

.

போலீசார் மிரட்டல்: பைனான்ஸ் அதிபர் தற்கொலை!

.

.

வியாழன், 16 மே 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon