மின்னம்பலம் மின்னம்பலம்
வியாழன், 13 ஆக 2020

மார்ட்டின் உதவியாளர் மரணம்: சிபிசிஐடி விசாரணைக்கு மறுப்பு!

மார்ட்டின் உதவியாளர் மரணம்: சிபிசிஐடி விசாரணைக்கு மறுப்பு!

மார்ட்டின் உதவியாளர் பழனிச்சாமியின் மரணம் தொடர்பான விசாரணையை சிபிசிஐடி'க்கு மாற்ற சென்னை உயர் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.

லாட்டரி அதிபர் மார்ட்டின் வீடு, அலுவலகங்களில் வருமான வரி துறையினர் சோதனையை தொடர்ந்து உதவியாளர் பழனிச்சாமி உடல் காரமடை அருகில் குட்டையில் பிணமாக மீட்கப்பட்டது. பழனிச்சாமி உடலில் ரத்த காயங்கள் இருக்கிறது. எனவே இந்த வழக்கை சிபிசிஐடிக்கு மாற்ற உத்தரவிட வேண்டும் என அவரின் மகன் ரோஹின்குமார் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

பழனிச்சாமியின் மர்ம மரணம் தொடர்பான விசாரணை அறிக்கை மற்றும் பிரேதப் பரிசோதனை அறிக்கை நேற்று (மே 15) நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த பிரேத பரிசோதனை அறிக்கை முழுமையாக இல்லை எனக் கூறி நீதிபதிகள் மரணமடைந்த பழனிச்சாமியின் கண் விழி, நாக்கு ஆகியவை வெளியே வந்தது தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்ய மருத்துவக்குழுவுக்கு உத்தரவிட்டிருந்தனர்.

இந்நிலையில் இந்த வழக்கு இன்று நீதிபதிகள் கார்த்திகேயன், கிருஷ்ணன் ராமசாமி அமர்வில் விசாரணைக்கு வந்தது. பழனிச்சாமி மரணம் தொடர்பாக சிபிசிஐடி விசாரணைக்கு மறுத்த நீதிபதிகள் மாஜிஸ்திரேட் விசாரணை நடத்த உத்தரவிட்டார். மேலும் மறு பிரேத பரிசோதனை செய்வது தொடர்பாக மாஜிஸ்திரேட்டிடமே குடும்பத்தினர் அணுக நீதிபதிகள் அறிவுறுத்தினர்.

பதப்படுத்தப்பட்டுள்ள பழனிச்சாமியின் உடலைப் பார்க்க குடும்பத்தினருக்கு அனுமதி வழங்க காவல்துறைக்கு உத்தரவிட்ட நீதிபதிகள் மாஜிஸ்திரேட் விசாரணையில் திருப்தி இல்லாவிட்டால் பழனிச்சாமியின் மகன் மீண்டும் நீதிமன்றத்தை அணுகலாம் என தெரிவித்து வழக்கை முடித்து வைத்தனர்

.

.

மேலும் படிக்க

.

ஓட்டப்பிடாரம்: வீட்டுக்கு வீடு அதிமுகவின் டெலிவரி அடையாளம்!

.

இந்தியன் 2 ஷங்கரின் அடுத்த பிளான்!

.

டிஜிட்டல் திண்ணை: அள்ளிவீசும் அதிமுக, அமமுக; கிள்ளிக் கொடுக்கும் திமுக

.

அஜித் 60ல் இணையும் இளம் இசையமைப்பாளர்!

.

போலீசார் மிரட்டல்: பைனான்ஸ் அதிபர் தற்கொலை!

.

.

வியாழன், 16 மே 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon