மின்னம்பலம் மின்னம்பலம்
புதன், 11 டிச 2019

டிஜிட்டல் பரிவர்த்தனை: புதிய திட்டம் அறிமுகம்!

டிஜிட்டல் பரிவர்த்தனை: புதிய திட்டம் அறிமுகம்!

இந்தியாவில் ரொக்கமில்லா டிஜிட்டல் பரிவர்த்தனைகளை உயர்த்தும் நோக்கத்தில் புதிய செயல் திட்டத்தை மத்திய ரிசர்வ் வங்கி அறிமுகப்படுத்தியுள்ளது.

2016ஆம் ஆண்டின் இறுதியில் பணமதிப்பழிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்ட போது, இந்தியாவில் ரொக்கப் பணப்புழக்கத்தைக் குறைத்து, டிஜிட்டல் பரிவர்த்தனைகளை உயர்த்தும் நடவடிக்கையாக மத்திய அரசு கூறியது. அதைத் தொடர்ந்து டிஜிட்டல் பரிவர்த்தனைகள் அரசு தரப்பிலிருந்து ஊக்குவிக்கப்பட்டு வருகின்றன. இருப்பினும் மக்களின் பெரும்பாலான தேவைகள் ரொக்கப் பரிவர்த்தனைகள் மூலமாகவே பூர்த்திசெய்யப்படுகின்றன. எனவே டிஜிட்டல் பரிவர்த்தனைகளை மேம்படுத்த ரிசர்வ் வங்கி புதிய செயல்திட்டம் ஒன்றை மே 15ஆம் தேதி அறிமுகம் செய்துள்ளது.

விஷன் 2021 என்ற தலைப்பில் வெளியிடப்பட்டுள்ள இத்திட்டத்துக்கான ஆவணத்தில் 2021ஆம் ஆண்டுக்குள் டிஜிட்டல் பரிவர்த்தனைகளை இப்போதுள்ள அளவிலிருந்து நான்கு மடங்கு உயர்வுடன் 8,707 கோடியாக உயர்த்த இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 2019 முதல் 2021 வரையில் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதற்கு முன்னர் 2016 முதல் 2018 வரையில் ஒரு டிஜிட்டல் பரிவர்த்தனை ஊக்குவிப்புத் திட்டம் செயல்பாட்டில் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

.

.

மேலும் படிக்க

.

ஓட்டப்பிடாரம்: வீட்டுக்கு வீடு அதிமுகவின் டெலிவரி அடையாளம்!

.

இந்தியன் 2 ஷங்கரின் அடுத்த பிளான்!

.

டிஜிட்டல் திண்ணை: அள்ளிவீசும் அதிமுக, அமமுக; கிள்ளிக் கொடுக்கும் திமுக

.

அஜித் 60ல் இணையும் இளம் இசையமைப்பாளர்!

.

போலீசார் மிரட்டல்: பைனான்ஸ் அதிபர் தற்கொலை!

.

.

வியாழன், 16 மே 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon