மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 16 மே 2019

தர்பார் ஷூட்டிங் அப்டேட்!

தர்பார் ஷூட்டிங் அப்டேட்!

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த், நயன்தாரா நடித்து வரும் தர்பார் படத்தின் படப்பிடிப்பு மும்பையில் தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது. தற்போது படத்தின் படப்பிடிப்பு பற்றிய புதிய தகவலொன்று கிடைத்துள்ளது.

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் பேட்ட திரைப்படத்தின் வெற்றிக்குப் பின் ரஜினிகாந்த் நடித்து வரும் படம் தர்பார். இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் முதன்முறையாக ரஜினிகாந்துடன் இணையும் இந்தப் படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது.

மும்பையில் நடைபெற்று வந்த இதன் முதல் கட்ட படப்பிடிப்பு தற்போது நிறைவடைந்துள்ளதாகப் படக்குழு அறிவித்துள்ளது. மேலும், படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு இம்மாத இறுதியில் தொடங்கவிருக்கிறது.

பிரதிக் பாபர், தலீப் தாஹில், ஜதின் சர்னா, யோகி பாபு, நிவேதா தாமஸ் என தர்பார் படத்தில் தமிழ்த் திரையுலகம் மட்டுமல்லாமல் மற்ற திரையுலகில் இருந்தும் நடிகர், நடிகைகள் படக்குழுவில் இணைந்து வருகின்றனர்.

1992ஆம் ஆண்டு வெளியான பாண்டியன் திரைப்படத்துக்குப் பின் ரஜினிகாந்த் காவல் துறை அதிகாரியாக நடிக்கும் இந்தப் படத்துக்கு ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரித்துக் கொண்டேயிருக்கிறது. சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்யும் இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைக்கவுள்ளார்.

.

.

மேலும் படிக்க

.

டிஜிட்டல் திண்ணை: அள்ளிவீசும் அதிமுக, அமமுக; கிள்ளிக் கொடுக்கும் திமுக

.

அஜித் 60ல் இணையும் இளம் இசையமைப்பாளர்!

.

இந்தியன் 2 ஷங்கரின் அடுத்த பிளான்!

.

போலீசார் மிரட்டல்: பைனான்ஸ் அதிபர் தற்கொலை!

.

என்.ஜி.கே. ரிலீஸ்: சூர்யாவின் புதிய சாதனை!

.

.

கர்நாடக நீர் வரத்து: உயரும் மேட்டூர் அணையின் நீர் மட்டம்!

3 நிமிட வாசிப்பு

கர்நாடக நீர் வரத்து: உயரும் மேட்டூர் அணையின் நீர் மட்டம்!

துப்பாக்கியுடன் செல்ஃபி: குண்டு பாய்ந்து பலியான சோகம்!

3 நிமிட வாசிப்பு

துப்பாக்கியுடன் செல்ஃபி: குண்டு பாய்ந்து பலியான சோகம்!

வேலைவாய்ப்பு: Indbank-ல் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: Indbank-ல் பணி!

வியாழன் 16 மே 2019