மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, சனி, 16 ஜன 2021

பள்ளி வாகனங்களில் ஜிபிஎஸ்: பள்ளிக் கல்வித் துறைக்கு உத்தரவு!

பள்ளி வாகனங்களில் ஜிபிஎஸ்: பள்ளிக் கல்வித் துறைக்கு உத்தரவு!

பள்ளி வாகனங்களில் ஜிபிஎஸ் கருவி, சிசிடிவி கட்டாயம் பொறுத்த வேண்டுமென்று கோரித் தொடுக்கப்பட்ட வழக்கில் தமிழகப் பள்ளிக் கல்வித் துறை பதிலளிக்குமாறு உத்தரவிட்டுள்ளது சென்னை உயர் நீதிமன்றம்.

சென்னை புரசைவாக்கத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் கோபி கிருஷ்ணன் என்பவர், பள்ளி வாகனங்களில் ஜிபிஎஸ், சிசிடிவி பொருத்த வேண்டுமென்று உத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்தார். “கடந்த பிப்ரவரி மாதம் கோவை மாவட்டத்தில் தனியார் பள்ளி வாகனமொன்றில் ஓட்டுநர் மற்றும் அவரது உதவியாளர் வாகனத்தில் வந்த நான்கு வயது மாணவிக்குப் பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளனர். இதுதொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டார். இது போன்ற சம்பவங்களால் பள்ளிக் குழந்தைகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளது.

இது போன்ற குற்றங்களைத் தடுக்கவும், பள்ளிக் குழந்தைகள் பாதுகாப்பை உறுதி செய்யவும் பள்ளி வாகனங்களில் சிசிடிவி மற்றும் ஜிபிஎஸ் கருவி பொருத்த உத்தரவிட வேண்டும். இது தொடர்பாக, தமிழக அரசிடம் கடந்த ஏப்ரல் மாதம் கோரிக்கை மனு அளித்தேன். ஆனால் இதுவரை எனது கோரிக்கை மனு மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை” என்று கோபி கிருஷ்ணன் தனது மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

நேற்று (மே 15) இந்த வழக்கு, விடுமுறை கால அமர்வு நீதிபதிகள் கார்த்திகேயன், கிருஷ்ணன் ராமசாமி அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த வழக்கு தொடர்பாக தமிழகப் பள்ளிக்கல்வித் துறைச் செயலாளர் நான்கு வாரங்களில் பதில் அளிக்க வேண்டுமென்று உத்தரவிட்டனர் நீதிபதிகள். இதையடுத்து, இந்த வழக்கு வரும் ஜூன் மாதத்துக்குத் தள்ளிவைக்கப்பட்டது.

பள்ளிகளில் பயோமெட்ரிக்

கடந்த ஆண்டு தமிழகம் முழுவதும் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியர் வருகையைப் பதிவு செய்யும் பயோமெட்ரிக் முறை அறிமுகப்படுத்தப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது. இதை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு, கடந்த ஏப்ரல் மாதம் தள்ளுபடி செய்யப்பட்டது. இந்த நிலையில், வரும் ஜூன் மாதம் முதல் தமிழகம் முழுவதும் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயோ மெட்ரிக் முறை கொண்டுவரப்படவுள்ளதாகத் தெரிவித்துள்ளார் தமிழகத் தொடக்கக் கல்வி இயக்குநர் கருப்பசாமி. இது தொடர்பான விவரங்களை வரும் மே 17ஆம் தேதிக்குள் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டுமென்று மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கு அவரது சார்பில் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

.

.

மேலும் படிக்க

.

டிஜிட்டல் திண்ணை: அள்ளிவீசும் அதிமுக, அமமுக; கிள்ளிக் கொடுக்கும் திமுக

.

அஜித் 60ல் இணையும் இளம் இசையமைப்பாளர்!

.

இந்தியன் 2 ஷங்கரின் அடுத்த பிளான்!

.

போலீசார் மிரட்டல்: பைனான்ஸ் அதிபர் தற்கொலை!

.

என்.ஜி.கே. ரிலீஸ்: சூர்யாவின் புதிய சாதனை!

.

.

வியாழன், 16 மே 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon