மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, திங்கள், 10 ஆக 2020

அட்லாண்டா சென்ற சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்!

அட்லாண்டா  சென்ற சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்!

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் நடைபெற்ற சர்வதேச திபுரான் திரைப்பட விழா மற்றும் நியூயார்க் சர்வதேச திரைப்பட விழாவைத் தொடர்ந்து அட்லாண்டா மாகாணத்தின் திரைப்பட விழாவிலும் இயக்குநர் வஸந்தின் "சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்" திரைப்படம் சிறந்த திரைப்படமாகத் தேர்வு செய்யப்பட்டு விருது பெற்றுள்ளது. தொடர்ந்து பல சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்படும் இத்திரைப்படத்துக்கு, திரைப்பட விழாக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.

இயக்குநர் வஸந்தின் “சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்” திரைப்படம் மும்பை திரைப்பட விழா, 23ஆவது கேரள சர்வதேச திரைப்பட விழா, பூனே சர்வதேச திரைப்பட விழா, சர்வதேச ஸ்வீடன் நாட்டு திரைப்பட விழா ஆகியவற்றில் தேர்வு செய்யப்பட்டுள்ளது. சர்வதேச பெங்களூர் திரைப்பட விழாவில் வெளியாகி ஆசியாவின் சிறந்த திரைப்படமாகத் தேர்வு செய்யப்பட்டு விருது பெற்றுள்ளது.

இத்திரைப்படத்தில் பார்வதி, லட்சுமி ப்ரியா சந்திரமௌலி, காளிஸ்வரி ஸ்ரீனிவாசன், கருணாகரன், ”மயக்கம் என்ன“ சுந்தர், கார்த்திக் கிருஷ்ணா, மாரிமுத்து மற்றும் மாஸ்டர் ஹமரேஷ், நேத்ரா என பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். இத்திரைப்படத்துக்கு என்.கே. ஏகாம்பரம் மற்றும் ரவிசங்கரன் ஆகியோர் ஒளிப்பதிவு செய்துள்ளனர். ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பு செய்துள்ளார். இத்திரைப்படத்தில் பிரத்யேகமாக பின்னணி இசை இல்லாதது அனைத்துத் திரைப்பட விழாக்களிலும் பாராட்டு பெற்றது குறிப்பிடத்தக்கது.

எழுத்தாளர்கள் அசோகமித்ரன், ஆதவன், ஜெயமோகன் ஆகியோரின் சிறுகதைகளைக் கொண்டு திரைக்கதை உருவாக்கப்பட்டு இயக்குநர் வஸந்த் இத்திரைப்படத்தை இயக்கி தயாரித்துள்ளார்.

மக்கள் கருத்து

.

.

மேலும் படிக்க

.

டிஜிட்டல் திண்ணை: அள்ளிவீசும் அதிமுக, அமமுக; கிள்ளிக் கொடுக்கும் திமுக

.

அஜித் 60ல் இணையும் இளம் இசையமைப்பாளர்!

.

இந்தியன் 2 ஷங்கரின் அடுத்த பிளான்!

.

போலீசார் மிரட்டல்: பைனான்ஸ் அதிபர் தற்கொலை!

.

என்.ஜி.கே. ரிலீஸ்: சூர்யாவின் புதிய சாதனை!

.

.

வியாழன், 16 மே 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon