மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, செவ்வாய், 22 செப் 2020

மோடியை நாடே கிண்டல் செய்கிறது: ராகுல்

மோடியை நாடே கிண்டல் செய்கிறது: ராகுல்

பிரதமர் மோடியை நாடே கிண்டல் செய்வதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.

மக்களவைத் தேர்தலின் ஏழாம் கட்ட வாக்குப்பதிவுக்காக தீவிர வாக்கு சேகரிப்பில் அரசியல் கட்சிகள் ஈடுபட்டுவருகின்றன. பஞ்சாப் மாநிலம், பரித்காட் பகுதியில் உள்ள பார்காரி நகரில் நேற்று (மே 15) காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது, பாஜக மீதும், மோடி மீதும் பல்வேறு விமர்சனங்களை முன்வைத்துள்ளார்.

“முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கை குறிப்பிட்டு கிண்டல் செய்தவர் மோடி. இப்போது ஐந்து ஆண்டுகள் ஆட்சியின் முடிவில், மன்மோகன் சிங்கை மீண்டும் மோடி கிண்டல் செய்ய முடியாது. ஏனென்றால், இந்த நாடே மோடியைக் கிண்டல் செய்கிறது” என்று விமர்சித்துள்ளார் ராகுல்.

தனி ஒருவரால் மட்டுமே இந்த நாட்டை நிர்வகிக்க முடியும் என்று மோடி நினைக்கிறார் என்று குற்றம்சாட்டிய ராகுல், “இந்த நாட்டை நிர்வகிப்பது மக்கள் மட்டும்தான். 2014இல் ஒவ்வோர் இந்தியர் வங்கிக் கணக்கிலும் ரூ.15 லட்சம் டெபாசிட் செய்யப்படும் என்று மோடி வாக்குறுதி அளித்திருந்தார். ஆனால், இதுவரை நிறைவேற்றவில்லை. இந்தப் பணம் எல்லாம் அனில் அம்பானிக்கும், நீரவ் மோடிக்கும்தான் சென்றடைகிறது.

ரூ.72,000 திட்டத்தை காங்கிரஸ் ஆட்சிக்கு வந்த ஒரு வருடத்தில் நிறைவேற்றுவோம். வங்கிகளில் மோசடி செய்துவிட்டு தப்பி ஓடிய விஜய் மல்லையா, நீரவ் மோடி உள்ளிட்டோரிடமிருந்து பணத்தை வசூல் செய்து இந்தத் திட்டத்துக்காகப் பயன்படுத்துவோம். இந்தத் திட்டமானது நாட்டின் பொருளாதார அமைப்புக்குப் புத்துயிர் கொடுக்கும்” என்று கூறியுள்ளார்.

மேலும், காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் விவசாயக் கடன்களுக்காக விவசாயிகள் யாரும் சிறையில் அடைக்கப்பட மாட்டார்கள் என்றும் அரசுத் துறையில் 22 லட்சம் வேலைவாய்ப்புகள் நிரப்பப்படும் என்றும் வாக்குறுதி அளித்தார். ரஃபேல் விவகாரத்தில் என்னுடன் மோடி விவாதிக்கத் தயாரா என்று சவால் விடுத்துள்ள ராகுல் காந்தி, 15 நிமிடங்கள் என்னுடன் பேசிய பிறகு பிரதமரால் இந்த நாட்டு மக்களிடம் முகத்தைக் காட்ட இயலாது என்று கூறினார்.

.

.

மேலும் படிக்க

.

டிஜிட்டல் திண்ணை: அள்ளிவீசும் அதிமுக, அமமுக; கிள்ளிக் கொடுக்கும் திமுக

.

அஜித் 60ல் இணையும் இளம் இசையமைப்பாளர்!

.

இந்தியன் 2 ஷங்கரின் அடுத்த பிளான்!

.

போலீசார் மிரட்டல்: பைனான்ஸ் அதிபர் தற்கொலை!

.

என்.ஜி.கே. ரிலீஸ்: சூர்யாவின் புதிய சாதனை!

.

.

வியாழன், 16 மே 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon