மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, வெள்ளி, 5 ஜுன் 2020

ஏற்றம் கண்ட ஏற்றுமதி!

ஏற்றம் கண்ட ஏற்றுமதி!

ஏப்ரல் மாதத்தில் இந்தியாவின் ஏற்றுமதி வர்த்தகம் 1.34 சதவிகிதம் வளர்ச்சி கண்டுள்ளது.

மத்திய வர்த்தக மற்றும் தொழில் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, ஏப்ரல் மாதத்தில் மொத்தம் 44.06 பில்லியன் டாலர் மதிப்பிலான பொருட்கள் மற்றும் சேவைகளை இந்தியா வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்துள்ளது. இது 2018ஆம் ஆண்டின் ஏப்ரல் மாதத்தின் ஏற்றுமதி மதிப்பை விட 1.34 சதவிகிதம் கூடுதலாகும். ஏப்ரல் மாதத்துக்கான ஏற்றுமதியில் அதிகபட்சமாக பெட்ரோலியம் பொருட்கள் ஏற்றுமதி 30.75 சதவிகிதமும், எலெக்ட்ரானிக் பொருட்கள் ஏற்றுமதி 27.78 சதவிகிதமும் வளர்ச்சி கண்டுள்ளன.

பெட்ரோலியம் பொருட்கள் மற்றும் நகை மற்றும் ரத்தினங்கள் அல்லாமல் இதர பொருட்கள் 19.54 பில்லியன் டாலர் மதிப்புக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. 2018 ஏப்ரல் மாதத்தில் இவற்றின் ஏற்றுமதி மதிப்பு 19.80 பில்லியன் டாலராக மட்டுமே இருந்தது. இறக்குமதியைப் பொறுத்தவரையில், ஏப்ரல் மாதத்தில் 4.35 சதவிகித உயர்வுடன் 52.83 பில்லியன் டாலர் மதிப்பிலான பொருட்களை இந்தியா இறக்குமதி செய்துள்ளது. கச்சா எண்ணெய் மட்டும் ரூ.78,989.46 கோடி மதிப்புக்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ளது.

.

.

மேலும் படிக்க

.

டிஜிட்டல் திண்ணை: அள்ளிவீசும் அதிமுக, அமமுக; கிள்ளிக் கொடுக்கும் திமுக

.

ரீபண்ட் தொகை: வருமான வரித் துறை எச்சரிக்கை!

.

இந்தியன் 2 ஷங்கரின் அடுத்த பிளான்!

.

போலீசார் மிரட்டல்: பைனான்ஸ் அதிபர் தற்கொலை!

.

என்.ஜி.கே. ரிலீஸ்: சூர்யாவின் புதிய சாதனை!

.

.

வியாழன், 16 மே 2019

chevronLeft iconமுந்தையது