மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, வியாழன், 22 அக் 2020

உலகக் கோப்பை கிரிக்கெட்: குவியும் விசா விண்ணப்பங்கள்!

உலகக் கோப்பை கிரிக்கெட்: குவியும் விசா விண்ணப்பங்கள்!

2019 ஐசிசி உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் தொடங்குவதற்கு இன்னும் இரண்டு வாரங்களே உள்ளன. இங்கிலாந்திலும், வேல்ஸிலும் உள்ள கிரிக்கெட் மைதானங்களில் உலகக்கோப்பை போட்டி நடைபெறவுள்ளது. இதைக் கண்டு ரசிப்பதற்காக ஏராளமான இந்திய ரசிகர்கள் பட்டாளமாக பயணிக்கத் திட்டமிட்டுள்ளனர். போட்டியைக் காண்பதற்காக சுமார் 80,000 பேர் இந்திய பாஸ்போர்ட்டுடன் பயணிக்கவிருப்பதாக பிரிட்டிஷ் உயர் ஆணையம் தகவல் வெளியிட்டுள்ளது.

இது குறித்து பிரிட்டிஷ் உயர் ஆணையத்தின் செய்தித் தொடர்பாளர் இந்தியன் எக்ஸ்பிரஸ் ஊடகத்திடம் பேசுகையில், “2019ஆம் ஆண்டு தொடக்கம் முதல் தற்போது வரையில், இயல்பை விட இங்கிலாந்து விசாக்களுக்கான தேவை அதிகரித்துள்ளது. கடந்த மாதங்களை விட தற்போது விசாக்களுக்கான தேவை கடுமையாக உயர்ந்துள்ளது. ஒவ்வொரு நாளும் இந்தியர்களிடமிருந்து சுமார் 3,500 விசா விண்ணப்பங்கள் வருகின்றன” என்று தெரிவித்துள்ளார்.

2015ஆம் ஆண்டில் நடைபெற்ற உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியை உலகம் முழுவதும் கண்டுகளித்த ஒட்டுமொத்த ரசிகர்களில் மூன்றில் ஒரு பங்கினர் இந்தியர்கள் (73 கோடிப் பேர்). தற்போது நடைபெறவுள்ள போட்டியை உலகம் முழுவதும் 150 கோடிப் பேர் கண்டுகளிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. மே 25ஆம் தேதியன்று நியூசிலாந்துடனும், மே 28ஆம் தேதியன்று வங்கதேசத்துடனும் வார்ம் அப் போட்டியாக இந்திய அணி மோதுகிறது.

பின்னர் ஜூன் 5ஆம் தேதியன்று உலகக் கோப்பை போட்டியாக தென்னாப்பிரிக்காவுடன் இந்திய அணி மோதுகிறது. இந்தப் போட்டி சவுத்தாம்ப்டனில் உள்ள ரோஸ் பவுல் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது.

.

.

மேலும் படிக்க

.

டிஜிட்டல் திண்ணை: அள்ளிவீசும் அதிமுக, அமமுக; கிள்ளிக் கொடுக்கும் திமுக

.

அஜித் 60ல் இணையும் இளம் இசையமைப்பாளர்!

.

இந்தியன் 2 ஷங்கரின் அடுத்த பிளான்!

.

போலீசார் மிரட்டல்: பைனான்ஸ் அதிபர் தற்கொலை!

.

என்.ஜி.கே. ரிலீஸ்: சூர்யாவின் புதிய சாதனை!

.

.

வியாழன், 16 மே 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon