மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, வியாழன், 21 நவ 2019

இந்தியாவில் ஏடிஎம்களுக்குத் தட்டுப்பாடு!

இந்தியாவில் ஏடிஎம்களுக்குத் தட்டுப்பாடு!

மக்களிடம் ரொக்கப் பணத்துக்கான தேவை அதிகமாகவே இருக்கும் நிலையில் ஏடிஎம் எந்திரங்கள் போதிய அளவில் இயங்காமல் இருப்பது நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவில் பணமதிப்பழிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்ட பிறகு கடந்த இரண்டு ஆண்டுகளாகவே பணப்பரிவர்த்தனைகள் அதிகரித்து வருகின்றன. ஆனால், இயக்கத்தில் இருக்கும் ஏடிஎம் எந்திரங்களின் எண்ணிக்கை குறைந்துகொண்டே செல்கிறது. பாதுகாப்பு அம்சங்களைக் கருத்தில்கொண்டு சென்ற ஆண்டில் மத்திய ரிசர்வ் வங்கி விதித்த கட்டுப்பாடுகளால் வங்கிகளுக்கும் ஏடிஎம் ஆபரேட்டர்களுக்கும் செயல்பாட்டுச் செலவுகள் அதிகரித்துள்ளன.

சர்வதேச நாணய நிதியத்தின் மதிப்பீட்டின்படி, பிரிக்ஸ் நாடுகளிலேயே இந்தியாவில்தான் (ஒரு லட்சம் பேருக்கு சராசரியாக) குறைந்த ஏடிஎம் எந்திரங்கள் இருக்கின்றன. இதனால் பணப்புழக்கத்தில் குறைபாடு ஏற்பட்டுள்ளதால் நிதிச் சேவைகளைச் சிறப்பாக வழங்குவதாக உறுதியளித்த மோடி அரசுக்கு எதிரான அதிர்வலைகள் அதிகரித்துள்ளன. ஏடிஎம் எந்திரங்களின் எண்ணிக்கை குறைந்து வருவதால் பொருளாதார ரீதியாகப் பின்தங்கிய மக்கள் கடுமையாகப் பாதிக்கப்படுவதாக ஹிடாச்சி பேமெண்ட் சர்வைசஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநரான ரஸ்டம் இரானி டைம்ஸ் ஆஃப் இந்தியா ஊடகத்திடம் தெரிவித்துள்ளார்.

.

.

மேலும் படிக்க

.

டிஜிட்டல் திண்ணை: அள்ளிவீசும் அதிமுக, அமமுக; கிள்ளிக் கொடுக்கும் திமுக

.

அஜித் 60ல் இணையும் இளம் இசையமைப்பாளர்!

.

இந்தியன் 2 ஷங்கரின் அடுத்த பிளான்!

.

போலீசார் மிரட்டல்: பைனான்ஸ் அதிபர் தற்கொலை!

.

என்.ஜி.கே. ரிலீஸ்: சூர்யாவின் புதிய சாதனை!

.

.

வியாழன், 16 மே 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon