மின்னம்பலம் மின்னம்பலம்
வெள்ளி, 29 மே 2020

உஸ்பெகிஸ்தான் பறக்கும் த்ரிஷா படக்குழு!

உஸ்பெகிஸ்தான் பறக்கும் த்ரிஷா படக்குழு!

எங்கேயும் எப்போதும் படத்தை இயக்கிய சரவணன் இயக்கத்தில் த்ரிஷா பிரதான கதாபாத்திரத்தில் நடித்து வரும் ராங்கி படத்தின் படப்பிடிப்புக்காக உஸ்பெகிஸ்தான் செல்லவுள்ளது படக்குழு.

த்ரிஷா நடித்த சதுரங்க வேட்டை 2, கர்ஜனை என்ற இரண்டு படங்களும் ரிலீஸுக்காகக் காத்திருக்கின்றன. மேலும் 1818, பரமபதம் என கைவசம் உள்ள படங்கள் வெவ்வேறு தயாரிப்பு நிலைகளில் இருக்கின்றன. இந்த நிலையில் எங்கேயும் எப்போதும் படத்தை இயக்கிய சரவணன் இயக்கத்தில் த்ரிஷா பிரதான கதாபாத்திரத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

ஏ.ஆர்.முருகதாஸின் கதை, வசனத்தில் உருவாகிக்கொண்டிருக்கும் இந்தப் படத்தின் தலைப்பிற்கேற்றார் போல த்ரிஷா தைரியமான பெண் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

கடந்த ஏப்ரல் மாதம் தொடங்கிய இந்தப் படத்தின் முதல் ஷெட்யூல் சில நாட்களுக்கு முன் நிறைவடைந்துள்ளது. அடுத்த கட்ட படப்பிடிப்பு வெளிநாடுகளில் அமைவது போல திட்டமிட்டுள்ளதால், லொகேஷனை முடிவு செய்ய முன்னமே உஸ்பெகிஸ்தான் செல்லவுள்ளது படக்குழு. இந்தப் படத்தை லைகா நிறுவனம் தயாரித்து வருகிறது.

.

.

மேலும் படிக்க

.

டிஜிட்டல் திண்ணை: அள்ளிவீசும் அதிமுக, அமமுக; கிள்ளிக் கொடுக்கும் திமுக

.

அஜித் 60ல் இணையும் இளம் இசையமைப்பாளர்!

.

இந்தியன் 2 ஷங்கரின் அடுத்த பிளான்!

.

போலீசார் மிரட்டல்: பைனான்ஸ் அதிபர் தற்கொலை!

.

என்.ஜி.கே. ரிலீஸ்: சூர்யாவின் புதிய சாதனை!

.

.

வியாழன், 16 மே 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon