மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, வியாழன், 21 நவ 2019

2019 தேர்தலின் மிகப்பெரிய பணக்கார வேட்பாளர் யார்?

2019 தேர்தலின் மிகப்பெரிய பணக்கார வேட்பாளர் யார்?

2019ஆம் ஆண்டுக்கான மக்களவைத் தேர்தலில் பணக்கார வேட்பாளராக சுயேச்சை வேட்பாளர் உள்ளார்.

மக்களவைத் தேர்தல் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இந்த ஆண்டு மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களில் அதிக சொத்து இருப்பதாகத் தாக்கல் செய்திருப்பவர் ரமேஷ் குமார் ஷர்மா என்ற சுயேச்சை வேட்பாளர். இவர் தனக்கு ரூ.1,107 கோடி சொத்து இருப்பதாக வேட்பு மனுவில் தாக்கல் செய்துள்ளார். இவர் பிகாரின் பாட்லிபுத்ரா தொகுதியில் பாஜக எம்.பி ராம் கிரிபால் யாதவை எதிர்த்துப் போட்டியிடுகிறார். இந்தத் தொகுதிக்கு மே 19ஆம் தேதி நடைபெறும் ஏழாம் கட்டத் தேர்தலின்போது வாக்குப்பதிவு நடைபெறுகிறது. பிரதமர் நரேந்திர மோடியின் பொய்யான வாக்குறுதிகளை எதிர்த்துத் தான் போட்டியிடுவதாகவும் அவர் கூறுகிறார். இவருக்கு வயது 63.

வோல்க்ஸ்வேகன் ஜீட்டா, ஹோண்டா சிட்டி, செவர்லெட் உள்ளிட்ட ஒன்பது வாகனங்கள் தன்னிடம் இருப்பதாக வேட்பு மனுவில் குறிப்பிட்டுள்ளார். இதுகுறித்து அவர் ஐ.ஏ.என்.எஸ் ஊடகத்திடம் பேசுகையில், “பணமதிப்பழிப்பு நடவடிக்கையால் மக்களிடமிருந்த பணத்தையெல்லாம் மோடி பறித்துவிட்டார். எல்லா இடங்களிலும் குற்றங்கள் நடக்கின்றன. நாட்டைச் சூறையாடுகிறார்கள். இந்தத் தேர்தலில் நான் மோடியை எதிர்த்துப் போட்டியிடுகிறேன்” என்றார்.

பெரும் பணக்கார வேட்பாளர்களின் பட்டியலில் முதல் ஐந்து இடங்களில் உள்ள ஒரே சுயேச்சை வேட்பாளர் ரமேஷ் குமார் ஷர்மா மட்டும்தான். எஞ்சிய நான்கு வேட்பாளர்களும் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்கள். தெலங்கானாவின் செவ்வெல்லா தொகுதியில் போட்டியிட்ட கொண்ட விஸ்வேஸ்வர் ரெட்டி ரூ.895 கோடி சொத்துகள் இருப்பதாகவும், மத்தியப் பிரதேசத்தின் சிஹிந்த்வாரா தொகுதியில் போட்டியிட்ட நகுல் நாத் ரூ.660 கோடி சொத்துகள் இருப்பதாகவும், கன்னியாகுமரி தொகுதியில் போட்டியிட்ட வசந்த் குமார் ரூ.647 கோடி சொத்துகள் இருப்பதாகவும், மத்தியப் பிரதேசத்தின் குணா தொகுதியில் போட்டியிட்ட ஜோதிரதித்ய சிந்தியா ரூ.374 கோடி சொத்துகள் இருப்பதாகவும் வேட்பு மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.

.

.

மேலும் படிக்க

.

டிஜிட்டல் திண்ணை: அள்ளிவீசும் அதிமுக, அமமுக; கிள்ளிக் கொடுக்கும் திமுக

.

அஜித் 60ல் இணையும் இளம் இசையமைப்பாளர்!

.

இந்தியன் 2 ஷங்கரின் அடுத்த பிளான்!

.

போலீசார் மிரட்டல்: பைனான்ஸ் அதிபர் தற்கொலை!

.

என்.ஜி.கே. ரிலீஸ்: சூர்யாவின் புதிய சாதனை!

.

.

வியாழன், 16 மே 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon